முருகன் கோவில் இல்லாத பகுதிகளில் எதற்கு வேல் யாத்திரை? -பாஜக-வுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

0

தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையி, யாத்திரை நடத்த  தமிழக அரசு அனுமதி மறுத்தது. மத்தியில் பாஜக ஆட்சி என்பதால் தடையை மீறி வேல் யாத்திரை நடத்தப்படும் என்று தமிழக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த 6 ஆம் தேதி காலை தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட நிர்வாகிகள் பலரை திருத்தணியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, வேல் யாத்திரையை தடுக்கக் கூடாது என உத்தரவிடக்கோரி பாஜக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று அவசர விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, கோவில்கள் தரிசனத்திற்க்கு திறக்கப்பட்ட பின் பக்தர்களுக்கு தடை விதிப்பது தவறு எனவும் கோவிலுக்குள் நுழைவதை முறைப்படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் இது அரசியல் யாத்திரை அல்ல எனவும் தெரிவித்தார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘யாத்திரைக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தில் எந்த விவரமும் இல்லை எனவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்புகள் உளது. நேற்று யாத்திரையில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் முக கவசம் அணியவில்லை.” என்றார்.

மேலும், முருகன் கோவிலுக்கு செல்வதாக இருந்தால் முருகன் கோவில் இல்லாத பகுதிகளுக்கு யாத்திரை செல்வது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனிடையே இவ்வழக்கு விசாரணையை, நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Comments are closed.