கோவை பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்: VHP-பாஜக பயங்கரவாதிகள் கைது

0

கோவை, வேதம்பாள் நகர் பகுதியிலுள்ள பள்ளிவாசல் மீது கடந்த 4ஆம் தேதி இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரனை நடத்தி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் சரவணம்பட்டி போலீஸாரால் அகில், பாண்டி என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அகில் விஷ்வ இந்து பரிசித் அமைப்பிலும், பாண்டி பாஜக உறுப்பினராகவும் உள்ளனர்.

இச்சம்பவத்திற்கும் இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்து முன்னணி பிரமுகர் ஆனந்தன் தாக்கப்பட்டதற்கு பழித்திர்ப்பாக, பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

Comments are closed.