கையில் பயங்கர ஆயுதங்களுடன் ராமர் கோயிலுக்கு நன்கொடை வசூல்: வி.எச்.பி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

0

ராமர் கோயில் கட்டுமானத்திற்கு, கையில் உருட்டுக்கட்டை – கத்திகளுடன் சென்று, விஸ்வ இந்து பயங்கரவாத அமைப்பினர் நன்கொடை வசூலில் ஈடுபடுவதாக, மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக் விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக மோடிக்கு கடிதம் எழுதியுள்ள திக்விஜய் சிங், அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இதனிடையே ராமர் கோயிலுக்கு 44 நாட்கள் நன்கொடை வசூலிக்கப்போவதாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அறிவித்துள்ளது. ஜனவரி 15 முதல்பணியையும் துவங்கி விட்டது.

ஆனால், நன்கொடை வசூலிக்கும்போது, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கையில் தடிகளுடனும், கத்திகளுடன் செல்கின்றனர். ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக கோஷமிடுவதும் நடக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகள் சனாதன தர்மத்துக்கு விரோதமானது. இதுபோன்ற சம்பவங்களால் மத்திய பிரதேச மாநிலத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து, சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி, இந்தூர், மண்டாசூர் மாவட்டங்களில் ராமர் கோயிலுக்கு நன்கொடை வசூலிக்கும் பணியில் இருந்தபோது, மதரீதியான மோதல் வெடித்தது. மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் நிச்சயமாக ராமர் கோயில் கட்டுமானத்துக்கு விரோதமாக இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இதுபோன்ற நிதிதிரட்டும், நன்கொடை வசூலிக்கும் பணியில், கையில் ஆயுதங்களுடன் பிற மதத்தினரை எரிச்சலூட்டும் வகையில் செயல்படுவோருக்கு தடை விதிக்குமாறு மாநில அரசுகளுக்கு நாட்டின் பிரதமராகிய நீங்கள் உத்தரவிட வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் கடந்த காலங்களில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை வசூலித்தது. அந்த பணத்தை என்ன செய்தது என்று தெரிய வேண்டும். அதன் கணக்கு விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும். இவ்வாறு திக்விஜய் சிங் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.