மோடியின் ஆட்சியை தத்ரூபமாக வரைந்த விகடன்: கதறும் எச்.ராஜா

0

பாஜக பிரமுகர் எச். ராஜா கடந்த சில வருடங்களாக தனது சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது விகடன் குழுமத்தின் அனைத்து பிரசுரங்களையும் புறக்கணிப்போம் என்று கூறியுள்ளார்.

விகடனில் நேற்று நடந்த விவசாயிகளின் டிராக்டர் போராட்டம் குறித்து ஒரு கார்ட்டூன் புகைப்படம் வெளியாகியது.

இந்த புகைப்படம் தத்ரூபமாக இருப்பதால் சமூக வலைதளத்தில் வைரலானது. இதனை அடுத்து கண்டித்து எச். ராஜா டிவிட் செய்துள்ளர்.

இதுகுறித்து எச்.ராஜா தனது டிவிட்டர் மற்றும் முகநூலில் கூறியிருப்பதாவது: இந்த அநாகரீக பத்திரிகை விகடனுக்கு ஒவ்வொரு பாஜக தொண்டனும் தக்க பாடம் புகட்ட வேண்டும். விகடன் குழுமத்தின் அனைத்து பிரசுரங்களையும் புறக்கணிப்போம். இவ்வாறு கூறியுள்ளார்.

“பிரசுரங்களையும் என்பதற்கு பதிலாக பிரசுரங்ஙளையும்” என்று தவறாக பதிவிட்டுள்ளாதால், சரியாக எழுத தெரியாத என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Comments are closed.