பாஜக அரசின் வேளான் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் தீர்மானம் நிறைவேற்றம்

0

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநில சட்டப்பேர்வையில் மாநில அரசு சார்பில் திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவது தொடர்பாக மத்திய  பாஜக அரசு கொண்டு வந்த 3 சட்டங்களுக்கு விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு பாஜக அரசுக்கு எதிராக வலுவான எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனை அடுத்து பஞ்சாப் மாநில முதல்வா் அமரீந்தா் சிங் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டமுடிவு செய்யப்பட்டது. அதன்படி திங்கள்கிழமை கூடிய சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மாநில அரசு சார்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மூன்று மசோதாக்களை முதல்வர் அமரீந்தர் சிங் அறிமுகப்படுத்தினார். மேலும் மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

Comments are closed.