வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிரடி சோதனை: விசாரணையில் அன்வர்ராஜா

0

சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

வக்ஃபு வாரிய தலைவராக இருக்கும் அ.தி.மு.க. எம்.பி அன்வர்ராஜாவிடம் தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது. மதுரையில் இருக்கும் வக்ஃபு வாரிய கல்லூரியில் பணியாளர்கள் நியமிப்பத்தில் மிக பெரிய முறைகேடு நடந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நிதீபதிகள் இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தது.

இதையடுத்து 7 பேர் கொண்ட சிபிஐ குழிவினர், ராமநாதபுரத்தில் உள்ள அன்வர்ராஜா வீட்டிற்கு சென்றனர். அதிமுக எம்பியான அன்வர்ராஜா, தற்போது வக்ஃபு வாரிய தலைவர் பொறுப்பில் உள்ளார். மேலும் சுமார் 4 மணி நேரம் அன்வர்ராஜாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் விசாரணை குறித்த தகவலை வெளியில் கூற மறுத்தனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று (22.3.19) காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.

Comments are closed.