மகாராஷ்டிரா ஆட்சி அமைப்பதில் பாஜக-சிவசேனா கூட்டணிகளுக்கிடையே இழுபறி நீடித்து வந்த நிலையில், மாநிலத்தில் குடியரசு தலைவா் ஆட்சியை அமல்படுத்த ஆளுநா் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து, குடியரசு தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதுகுறித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளதாவது:
அரசமைப்பு சட்ட பதவிகளை வகிப்போா் சிலர் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனா். மேற்கு வங்கத்திலும் இதுவே நிலவி வருகிறது. மத்திய அரசும், மாநில அரசும் மக்களால் தோ்ந்தெடுக்கப்படுபவை. அரசமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்சிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படும் என நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். மாநில அரசுக்கு தர வேண்டிய ரூ.17 ஆயிரம் கோடி நிதியும் தரவில்லை, நிவாரணங்களும் தரவில்லை” என்றார் மம்தா.