மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக அரசுக்கு எச்சரிக்கை

0

பாஜக அரசின் வேளான் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து 9-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பாஜக அரசு 2 முறை விவசாயிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், இந்த போராட்டம் வலு பெற்றுள்ளது.

இதனால், மத்திய அரசு விவசாய சட்டங்களை ரத்து செய்ய்யும் வரை போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் மத்திய அரசு உடனடியாக வேளான் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால், நாங்கள் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் என மேற்கு வங்கள மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “விவசாயிகள் வாழ்க்கை நிலை எனக்கு பெரிதும் கவலையை ஏற்படுத்துகிறது. ஆகவே, மத்திய அரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். உடனடியாக அந்த சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால், நாங்கள் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம். இந்த சட்டங்களை ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வருகிறோம்.

பாஜக அரசு எல்லாவற்றையும் விற்பனை செய்து வருகிறது. ஆனால், ரயில்வே, ஏர் இந்தியா, நிலக்கரி நிறுவனம், பி.எஸ்.என்.எல்., பெல், வங்கிகள் ஆகியவற்றை விற்க முடியாது. இந்த தனியார்மய கொள்கையை மத்திய அரசு உடனே வாபஸ் பெற வேண்டும். நாட்டின் கருவூலங்கள், பாஜகவின் தனிப்பட்ட சொத்தாக மாற்றப்படுவதை அனுமதிக்க மாட்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Comments are closed.