போதைப் பொருள் கடத்தல் வழக்கு: பாஜக தலைவர் அவரது மகன்களுடன் கைது

0

மேற்கு வங்கத்தில் பாஜக இளைஞரணி பொதுச்செயலாளரும், அக்கட்சியின் முன்னணி தலைவருமான பமீலா கோஸ்வாமி கடந்த சில நாட்களுக்கு முன் காரில் போதைப்பொருள் கடத்தி காவல்துறையிடம் சிக்கிக் கொண்டார்.

ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கொக்கைன் போதைப் பொருளை அவரிடமிருந்து காவல்துறையினர் கைப்பற்றினர். இதுதொடர்பான வழக்கில், பமீலா கோஸ்வாமி மட்டுமன்றி அவரது நண்பர் பிரபீர் குமார், பாதுகாவலர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கொக்கைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில், முக்கியச் சதிகாரராக பாஜக-வின் மற்றொரு முக்கியத் தலைவரான ராகேஷ் சிங்கையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

முன்னதாக, ராகேஷ் சிங்கை கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்றபோது, காவல்துறை பணிசெய்ய விடாமல் தடுத்த, அவரது மகன்கள் சாகேப் சிங் (22), சோஹம் சிங்(24) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். பாஜக தலைவர் ராகேஷ் சிங் மீது, ஏற்கெனவே 25-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. மே 2019-இல் அமித் ஷாவின் பேரணியின் போது வன்முறையில் ஈடுபட்ட கும்பலுக்கு தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.