ஆட்சிக்கு வந்தால் போலிஸை பூட்ஸ் நக்க வைப்போம் -பாஜக தலைவர் விஷம கருத்து

0

மேற்கு வங்க பாஜக தலைவர் ராஜு, பாஜக ஆட்சிக்கு வந்தால், காவல்துறையை காலை நக்கவைப்போம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று துர்காபூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராஜு பானர்ஜி, “மேற்கு வங்க மாநிலத்தில் குண்டர்களின் ராஜ்ஜியம் அதிகரித்துவிட்டது? போலீசார் எந்த உதவியும் செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அத்தகைய போலீசாரை பூட்ஸ் நக்க வைப்போம்.” எனக் கூறினார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, அமைதிக்கு இடையூறு விளைக்கவே மற்ற மாநிலங்களிலிருந்து ஒருசிலர் குண்டர்கள் வருகிறார்கள். மாநிலத்தில் அமைதியின்மையை உருவாக்க முயலும் குண்டர்கள் மற்றும் வெளியாட்களை நாம் அனைவரும் சேர்ந்து எதிர்த்து நிற்கவேண்டும். பிளவுபடுத்தும் சக்திகளான இந்த வெளியாட்களை நாம் தோற்கடிக்க வேண்டும் என மம்தா அன்மையில் பேசினார் குறிப்பிடத்தக்கது.

Comments are closed.