மேற்கு வங்க பாஜக எம்.பி-யின் உறவினர் வங்கி மோசடி வழக்கில் கைது

0

மேற்கு வங்க மாநிலத்தில் கூட்டுறவு வங்கியில் பணம் மோசடி செய்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன் சிங்கின் உறவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம், பராக்பூர் தொகுதியின் மக்களவை உறுப்பினரான (பாரதிய ஜனதா கட்சி) பாஜகவைச்  சேர்ந்த அர்ஜூன் சிங். இவரது மருமகனான சஞ்சீத் சிங், வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராக்பூர் கூட்டுறவு வங்கியில் பண மோசடி செய்துவிட்டு தப்பிவிட்டார்.

இந்நிலையில் சஞ்சீத் சிங் மீதான புகார் அடிப்படையில் அவரை மேற்குவங்க காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்து உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன் சிங், “மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் அரசு வேண்டுமென்றே பொய் குற்றச்சாட்டை கூறி கைது செய்ததுள்ளது. தனக்கு எதிராக ஆதாரங்களை தயாரிக்க முடியாததால் எனது மருமகனை காவல்துறை கைது செய்துள்ளது. இவ்வழக்கை சட்டப்படி நீதிமன்றத்தில் நிரூபித்து காட்டுவேன்” இவ்வாறு அர்ஜூன் சிங் தெரிவித்தார்.

Comments are closed.