கொல்கத்தாவில் கலவரத்தில் ஈடுபட்ட பாஜகவினர்: காவல்துறை மீது வெடிகுண்டு வீச்சு

0

கொல்கத்தா மற்றும் ஹவுரா மாவட்டத்தில் பாஜகவினர் வன்முறையில் ஈடுபட்டதில் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜி அரசை கண்டித்து தலைமை செயலகத்தை நோக்கி பாஜகவினர் வியாழக்கிழமை பேரணியில் ஈடுபட்டனர்.

இந்த பேரணிக்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், அனுமதி மீறி பேரணி நடத்திய பாஜகவினர், மேற்குவங்க அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலையில் டயர்களை தீயிட்டு எரித்து வன்முறையில் ஈடுபட்டனர்.

பேரணி என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட வந்த பாஜகவினர், காவல்துறை மீது குண்டுகளையும், செங்கற்களையும் பாஜகவினர் வீசினர். கற்கள் மற்றும் குண்டுகள் வீசி தாக்குதலில் ஈடுபட்டதால், காவல்துறையினர் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பாஜக நிர்வாகியிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தடியடி நடத்தி வன்முறையில் ஈடுடப்பட பாஜகவினரை விரட்டியடித்தனர் காவல்துறையினர்.

Comments are closed.