‘கொள்ளையர்களின் தலைவர்’ நரேந்திர மோடி -மம்தா விமர்சனம்

0

பிரதமர் மோடி “கொள்ளையர்களின் தலைவர்” என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் மோடி ‘கொள்ளையர்களின் தலைவர்’ என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

நேற்று கிழக்கு மேத்னிபூர் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய மம்தா, “திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகியவர்கள் அனைவரும் நம்மை ஏமாற்றியுள்ளனர். யார் யார் எவ்வளவு பணம் பெற்றுள்ளனர் என்பதை அவர்களிடமே கேளுங்கள். திரிணமூல் காங்கிரஸை திருடுபவர் , கொள்ளையர்களின் தலைவரான நரேந்திர மோடி. தற்போது பாஜகவுடன் தொடர்பில் இருக்கும் யாராக இருந்தாலும், அவர்களோடு நாம் பேசுவதில்லை. அவர்கள் கட்சியினை விட்டு விலகினாலும் கவலையில்லை.

இப்படி விலகிப் போனவர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். அவர்களை விரும்பினேன். ஆனால் அவர்கள் துரோகிகள். இவர்களை விட மோசமான துரோகிகளே இல்லை என்பதை மட்டும் மனதில் தெளிவாக வைத்துக்கொள்ளுங்கள்” இவ்வாறு மம்தா பேசினார்.

Comments are closed.