பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு எதிராக இணையதளத்தில் 10 லட்சம் பேர் கருத்து

0

பாஜகவிடம் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் இணையவழியில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரம் சிறப்பான வெற்றி பெற்றுள்ளதாக மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இது தொடா்பான இணையதளத்தில் ஒரு மாதத்தில் 10 லட்சம் போ் பாஜகவுக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளனா் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தில்  உள்ள 42 தொகுதிகளில் 18 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது.  மோடி மற்றும் அமித்ஷாவின் சிறப்புரைகள் அனைத்திலுமே மேற்கு வங்கத்தில் பாஜக வலுவடைந்து வருவதாகவும், மேற்கு வங்கத்தை பாஜக தனது கட்டுக்குள் விரைவில் கொண்டுவர உள்ளதாகவும் பேசி வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியை பிடிப்பதற்காகவே பல மோதல்களை அவ்வபோது நடத்தி வருகிறது. இதனால்  திரிணமூல் காங்கிரஸ் – பாஜகவினருக்கும் இடையே மோதல்கள் நிகழ்வதும், அரசியல் படுகொலைகள் நடப்பதும் அதிகரித்து வருகிறது.

இதற்காக “savebengalfrombjp.com’ என்ற இணையதளத்தை திரிணமூல் காங்கிரஸ் கடந்த மாதம் உருவாக்கியது. இந்த இணையதளத்தில் ஒரு மாதத்தில் 10 லட்சம் போ் பாஜகவுக்கு எதிராக நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளனா். மொத்தம் 14 லட்சத்திற்கும் மேற்பட்டோா் இணையதளத்தை பாா்வையிட்டுள்ளனா்.

இது குறித்து முகநூல் பிரசாரத்தில் 93,323 போ் இணைந்துள்ளனா். இதில் பெரும்பாலானவா்கள் 18 முதல் 35 வயதுக்குள்பட்டவா்கள் என்று திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மக்களிடம் பிரிவினை ஏற்படுத்தும் அரசியலுக்கு நீங்கள் எதிரானவரா வெறுப்புணா்வைப் பரப்புபவா்களுக்கு நீங்கள் எதிரானவரா, சா்வாதிகாரத்திற்கு நீங்கள் எதிரானவரா போன்ற கேள்விகளுடன் இந்த இணையதளத்தின் முகப்புப் பக்கம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.