மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஆட்சியை பிடிப்பதற்காக பாஜக மேற்கு வங்கத்தில் வன்முறையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநில தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜாகீர் உசைன் நேற்று இரவு தனது ஆதரவாளர்களுடன் முர்ஷிதாபாத் மாவட்டம் நிம்திதா ரயில் நிலையம் சென்றார்.
அப்போது அவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். குண்டுகள் வெடித்ததால் அமைச்சர் ஜாகீர் உசைன் மற்றும் சிலர் பலத்த காயமடைந்தனர். அமைச்சருக்கு ஒரு கை மற்றும் ஒரு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ‘ இதனால் அப்பகுதி பதற்றமானது.
பின்னர் அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே படுகாயம் அடைந்த அமைச்சர் ஜாகீர் உசைன் மேல் சிகிச்சைக்காக கொல்கத்தா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அமைச்சரின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அமைச்சர் மீதான தாக்குதலுக்கு மத்திய ரயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தால் ரயில் நிலைய வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.