“நான் உயிருடன் இருக்கும் வரை பாஜகவை ஆட்சிக்கு வர விட மாட்டேன்” -மம்தா உறுதி

0

மேற்கு வங்கத்தில் நான் உயிருடன் இருக்கும் வரை பாஜகவை ஆட்சிக்கு வர விட மாட்டேன் என அம்மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளர்..

மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மம்தாவின் ஆட்சியை அகற்றிவிட்டு மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சியமைக்க வன்முறை நடத்தி வாக்கு சேகரித்து வருகிறது. இதற்காக அமித்ஷா உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், வழக்கம்போல் மம்தா பானர்ஜி பாஜவுக்கு கடும் பதிலடி கொடுத்து வருகிறார். மால்டாவில் நகரில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்  மம்தா பானர்ஜி பேசியதாவது:

”பாஜகவை ஆட்சி கட்டிலில் அமர வைத்தால் கலவரம் தான் நடக்கும். கலவரம் நடக்க வேண்டும் என விரும்பினால் நீங்கள் பாஜகவுக்கு வாக்களியுங்கள். ஆனால் நீங்கள் மம்தா பானர்ஜியை தோற்கடிக்க முடியாது. ஏனெனில் மம்தா பானர்ஜி தனியொரு பெண் அல்ல. என் பின்னால் மக்கள் திரண்டுள்ளனர். மேற்குவங்கத்தில் நான் உயிருடன் இருக்கும் வரை பாஜகவை ஆட்சிக்கு வர விட மாட்டேன். இது உறுதி.” என கூறினார்.

Comments are closed.