மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய பாஜக

0

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவினர் வெடிகுண்டுகள், கற்களை டொண்டு திருணாமுல் காங்கிரசினரை தாக்கியதால் மோதல் வெடித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம், பிா்பூம் மாவட்டம் சுரி பகுதியில் மாநில பாஜக தலைவா் திலீப் கோஷ் சாா்பில் நேற்று நடத்தப்பட்ட ஊா்வலத்தில் பாஜகவினர், வெடிகுண்டுகளையும், கற்களையும் கொண்டு திருணமூல் காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினா் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசி, மோதலை கட்டுப்படுத்தினா்.

மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 2021 ஏப்ரல்-மே மாதத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வரவுள்ள நிலையில் பாஜகவினர் மோதலில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்க முயன்றுள்ளனர்.

இது குறித்து திரிணமூல் மாவட்ட தலைவா் அபிஜித் சின்ஹா, ‘இந்த தாக்குதலுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி காரணமல்ல. ஜனநாயகத்தின் மீது திரிணமூல் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது. பாஜகவை சோ்ந்தவா்கள்தான் வெளியிலிருந்து நபா்களை அழைத்துவந்து, எங்கள் கட்சி தொண்டா்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனா்’ என்றாா்.

Comments are closed.