மேற்கு வங்க அமைச்சர் ஜாகீர் உசேன் மீது வெடிகுண்டு வீசியது பாஜகவா..?

0

மேற்கு வங்க மாநிலத்தில் அமைச்சர் ஜாகீர் உசைன் மீது வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சதிச் செயலே காரணம் என அம்மாநில முதல்வர் செல்வி மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், மேற்கு வங்க மாநில தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜாகீர் உசைன் நேற்று இரவு தனது ஆதரவாளர்களுடன் முர்ஷிதாபாத் மாவட்டம் நிம்திதா ரயில் நிலையம் சென்றார்.

அப்போது அவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். குண்டுகள் வெடித்ததால் அமைச்சர் ஜாகீர் உசைன் மற்றும் சிலர் பலத்த காயமடைந்தனர். அமைச்சருக்கு ஒரு கை மற்றும் ஒரு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ‘ இதனால் அப்பகுதி பதற்றமானது. பின்னர் அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே படுகாயம் அடைந்த அமைச்சர் ஜாகீர் உசைன் மேல் சிகிச்சைக்காக கொல்கத்தா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு சதி செயலே காரணம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சர் ஜாகீர் உசேன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெரிய சதி அடங்கியுள்ளது. மேற்கு வங்கத் தொழிற்துறை அமைச்சர் ஜாகீர் உசேனை வேறு கட்சியில் சேருமாறு அவருக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டு வந்ததாகவும், இதன் உச்சகட்டமாக அவர் மீது திட்டமிட்டு குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் மம்தா பானர்ஜி பாஜகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

எந்த விதமான பாதுகாப்பும் இன்றி ரயில்வே துறை மெத்தனமாக நடந்துள்ளது. அமைச்சர் உசேன் மீது தாக்குதல் நடத்துவது என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் சாடினார். மேலும் அமைச்சர் மீது குண்டு வீசப்பட்ட வழக்கை, மேற்கு வங்க அரசு சி.ஐ.டி-க்கு மாற்றியுள்ளது. இந்தக் குண்டு வீச்சு சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சமும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Leave A Reply