சட்டம் இயற்றிய பின்னும் தொடரும் கும்பல் படுகொலை!

1

மேற்குவங்கத்தில் இந்துத்துவா கும்பலால் தாக்குதலுக்குள்ளான கபீர் சேக் என்பவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்குவங்க மாநிலம் லால்பேக் பகுதியில் ஏழுபேர் கொண்ட இந்துத்துவா கும்பல், 32 வயதான கபீர் சேக் என்பவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. பின்னர் முர்சிதாபாத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கபீர் சேக் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து முர்சிதாபாத் மாவட்ட தலைமை காவல்துறை அதிகாரி கூறுகையில், “கபீர் சேக்கின் கை, கால்களை கட்டிவைத்து தாக்கியுள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் இருவரை கைது செய்து, மற்ற குற்றவாளிகளை தேடி வருகிறோம். பலியான கபீர் சேக், சவுதியில் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். இத்தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. இதற்கான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கும்பல் தாக்குதலில் உயிரிழந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என்று மேற்கு வங்க அரசு சட்டம் இயற்றிய அடுத்த வாரமே இச்சம்பவம் அரங்கேறியுள்ளாது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Discussion1 Comment