CAA சட்டத்தை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா 3000 கி.மீ யாத்திரை

0

பாஜக அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் யாத்திரையை தொடங்கினார்.

“காந்தி சாந்தி யாத்திரை என பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரையில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், டெல்லி ஜே.என்.யு. வன்முறை தாக்குதலுக்கு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரக்கூடாது என நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்.

இந்த யாத்திரை மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடங்கி, குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் அரியானா ஆகிய 5 மாநிலங்கள் வழியாக டெல்லியை வந்தடைகிறது. இந்த யாத்திரையானது, காந்தி படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30 நாளன்று டெல்லி ராஜ்காட்டில் முடிவடைய உள்ளது.

இந்த யாத்திரையை மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தொடங்கி வைத்தார்.

Leave A Reply