பாஜகவின் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்: தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

0

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கோரும் வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை பாஜக நடத்தும் வேல் யாத்திரை அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

இந்த வேல் யாத்திரைக்கு விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் தடைகோரி வருகின்றன.

பாஜகவின் வேல் யாத்திரையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில், சட்டம் – ஒழுங்கு பிரச்சனை என கூறி பாஜகவின் வேல் யாத்திரிகைக்கு தடை கோரிசென்னையைச் சேர்ந்த செந்தில் குமார், பாலமுருகன் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு, மருத்துவர்கள் உள்ளிட்டோர்களின் அனைத்து முயற்சிகளும் வீணாகுவதுடன் கொரோனா பரவலும் அதிகரிக்கும் என்றும் யாத்திரை முடியும் நாளான டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மனுதாரர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இதையடுத்து பாஜக வேல் யாத்திரைக்கு தடை கோரிய மனுவை அவசர வழக்ககாக நாளை விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவித்துள்ளது.

Comments are closed.