அதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி

0

அதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி

“சமகால வரலாற்று ஆசிரியர்களுக்கு, சந்தையைக் கட்டுப்படுத்துவதற்கான அலாவுதீன் கில்ஜியின் நடவடிக்கைகள் உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. உணவு தானியங்களில் ஆரம்பித்து, சர்க்கரை, சமையல் எண்ணெய் முதல் ஊசி வரை உள்ள அனைத்துச் சரக்குகளுக்கு மட்டுமல்லாமல் விலைமதிப்பான இறக்குமதித் துணிகள் மற்றும் குதிரைகள், கால் நடைகள், அடிமைகள் என்று அனைத்துச் சரக்கிற்கும் விலையை நிர்ணயம் செய்து டில்லியில் மூன்று சந்தைகளை அமைத்தார். வரலாற்று ஆசிரியர் பரணி ‘தானியச் சந்தையின் நிலையான விலை அக்காலத்தில் அதிசயம்’ என்று குறிப்பிடுகிறார்.  இத்தகவலைத் தருவது மத்திய கால இந்திய வரலாற்று நூலைத் தந்த சதீஷ் சந்திரா.

(Satish Chandra, History of Medieval india, Orient Black Swan, Hyderabad, First published2007, reprinted 11th edition 2018, page 101, page, 103)

உணவிற்கு அடுத்த மக்களின் தேவை ‘உடை’ ஆகும். பதௌன் வாயிலின் அருகே காலியாக உள்ள இடத்தில் ரியாய அரண்மனையில் சராயே அதல் (Sarai
Adl)) அமைத்தார். விரைவில் கெட்டுப் போகாத துணிகள் வெகு நாட்கள் அங்கு வைக்கப்பட்டது. துணிகள் தவிர இதர பொருட்களும் காலை முதல் மாலை நேர பிரார்த்தனை நேரம் வரை திறந்து வைக்கப்பட்டிருந்தது. (A Comprehensive
History of india, Edited by M.Habid and K.A.Nizami, Delhi 2006, page 382)

பொருள்களை உற்பத்தி செய்தற்காக செலவிடப்பட்ட தொகையை அலாவுதீன் கில்ஜி கருத்தில் கொண்டே மார்க்கெட்டில் விலையை நிர்ணயித்தார்.

வியாபாரிகள் தொலைதூரத்திலிருந்து பொருள்களைக் கொண்டு வரும்போது நஷ்டம் ஏதும் ஏற்பட்டால் அரசு உதவிப் பணமும் அளித்துள்ளது. மூல்தானிய வியாபாரிகளுக்கு இரண்டு லட்சம் டங்காக்களை அலாவுதீன் கில்ஜி வழங்கினார்.

ஆனால் வியாபாரிகளுக்கு நியாயமான அளவில் இலாபம் கிடைத்திடும் வகையிலேயே மார்க்கெட்டில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது என்று பரணி குறிப்பிடுகிறார்.

டில்லியில் இந்த அங்காடியில் விற்பனையாகும் உயர் ரகத்துணிகளை வியாபாரிகள் விலைக்கு வாங்கி, டில்லிக்கு வெளியே கொண்டு சென்று அங்கு அதனை அதிக விலைக்கு விற்பதாக அலாவுதீன் கில்ஜி அறிந்தார். அதனைத் தடுத்து நிறுத்திட வழி கண்டார். அதன்படி விலை உயர்ந்த துணி மணிகள் அனுமதி பெற்றவர்களுக்கே விற்கப்பட்டன. அத்தகைய துணிகள் வாங்க விரும்புவோர் அதற்கென நியமிக்கப்பட்ட அரசாங்க அதிகாரியை நாடி அந்தப் பொருளின் பெயரையும், அளவையும் அவர்களிடம் கொடுக்க வேண்டும். அவர்களது வருமானத்தையும் அறிவித்தனர். அதிகாரிகள் பரிசீலனை செய்த பிறகு அவற்றை சொந்த உபயோகத்திற்காக வாங்கப்படுகிறது என்று அரசாங்க அதிகாரி கருதினால் மட்டும் அனுமதி பத்திரம் வழங்கப்பட்டது. இத்திட்டம் அடியோடு ‘கள்ளமார்க்கெட்டை’ ஒழித்தது.

(கே.எஸ். லால், முற்கூறிய நூல், பக்கம் 210)

எல்லாப் பொருட்களுக்கும் அன்றைய அரசு அறிவித்த விலைப்பட்டியல் உள்ளது. அது இன்று அவசியமில்லை என்பதால் அவைகளை விட்டு விடுகிறேன்.

குதிரைகள் அங்காடி

குதிரை வியாபாரிகள் அடக்கப்பட்டனர். குதிரைகள் விலை ஏறுவதற்கு காரணமான தரகர்களை முற்றிலுமாக ஒழித்திடாமல், அவர்கள் உதவியுடன் தரமான குதிரைகளை வாங்கிட வேண்டியிருப்பதால், அவர்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டார் அலாவுதீன் கில்ஜி.

நாற்பது அல்லது அறுபது நாட்கள் கழிந்தபிறகும் விற்கப்பட்ட குதிரையும் அதற்கு உடந்தையாக இருந்த தரகரும் அலாவுதீன் கில்ஜி முன்னால் கொண்டு வரப்பட்டு விசாரணை நடைபெற்றது. தரகர்கள் தவறிழைத்திருந்தால் கடுமையான தண்டனைகள் தரப்பட்டது. ஒற்றர் படையும் தனது பணியினைச் செம்மையாக செய்தது. அதனால் குதிரைகளின் விலை கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. அதற்குப் பிறகு குதிரை வியாபாரிகளிடம் அலாவுதீன் கில்ஜி கருணை காட்டினார். அவர்களை சிறையிலிருந்து விடுவித்தார். குதிரைகளை வாங்கவும் விற்கவும் அனுமதித்தார். ஆனால் அரசாங்கம் குறிப்பிட்டிருந்த விலைகளுக்கு மேலாக அவர்கள் குதிரைகளை விற்க முடியாது.

in this way the king (Alauddin) was successful inestabishing fixed prices for horses of everyday.

(கே.எஸ். லால், முற்கூறிய நூல், பக்கம் 212)

கால்நடைகளின் விலைகளையும் அலாவுதீன் கில்ஜி நிர்ணயித்திருந்தார். முந்தைய குதிரை வணிகத்திற்கான சட்டங்களே இங்கேயும் பின்பற்றப்பட்டது.

பொது அங்காடிகள்

நகரின் எல்லாப் பகுதிகளிலும் பொது அங்காடிகள் அமைக்கப்பட்டன. அது வணிக அமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

தொப்பி, சீப்பு, ஊசி, பால், காய்கறிகள், ரொட்டி, மீன், வெற்றிலைபாக்கு,  பூக்கள் அவற்றின் விலையை அலாவுதீன் கில்ஜியே நிர்ணயித்து அதை அங்காடிகளுக்கு அனுப்பிவைத்தார்.

மாலிக் யாகூப் வணிக அமைச்சர், முஹ்தாசிப் (தணிக்கை அதிகாரி); நாசீர் (அளவை மேற்பாவையாளர் இவ்மூன்று பேர்களும் இணைந்தே பணிபுரிந்தனர்.

அங்காடிகளில் பொருட்கள் அனைத்தும் விற்பதற்காக அலாவுதீன் கில்ஜியால் தயாரிக்கப்பட்ட விலைப் பட்டியல்கள் திவான்& -சி-&ரியாசத் வணிக அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டன.

வணிக அமைச்சகத்திலிருந்து பட்டியல்கள் மேற்பார்வையாளர்களுக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் கடைகளில் சென்று அங்கு பொருட்கள் எந்த விலையில் விற்கப்படுகிறது என்பதனை தெரிந்து கொடுக்கப்பட்ட விலைப் பட்டியலும், விற்கப்பட்ட விலையும் சரியாக இருக்கிறதா என்பதனைக் கண்டறிந்திட அலாவுதீன் கில்ஜி ஆணையிட்டிருந்தார். அரசு அறிவித்த விலையை விட அதிகமான விலையில் விற்றிருந்தால் கடுந்தண்டனை வழங்கப்பட்டது. கடைக்காரர்கள் சவுக்கடிகளை சன்மானமாகப் பெற்றனர்.இவ்வளவையும் மீறி சில நேரங்களில் கடைக்காரர்கள் ஏமாற்றுகிறார்கள்; எடை போடும் போது குறைக்கிறார்கள் என்பதை அறிந்து சிறிய பையன்களைச் சந்தைக்கு அனுப்பி சாமான்களை வாங்கி வரச் சொல்லி அதன் எடை சரியாக இருக்கிறதா என்று எடை போட்டு சரிபார்ப்பார் அலாவுதீன் கில்ஜி.

எடை குறைவாக இருந்தால் வணிக அமைச்சக அதிகாரியிடம் கொடுத்து அனுப்புவார். அவர் அந்தக் கடைக்கு விரைவார். எவ்வளவு எடை குறைந்ததோ அந்த அளவு அந்த வியாபாரியின் சதை வெட்டி எடுக்கப்படும். இவ்வாறு அச்சுறுத்தி, விலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அலாவுதீன் கில்ஜி வெற்றிகரமாக செயற்படுத்தி வந்தார். அது அலாவுதீன் கில்ஜியின் மிகச் சிறந்த சாதனைகளில் ஒன்றாகும்.

(ரி.ஷி. லிணீறீ, முற்கூறிய நூல், பக்கம் 215)

இத்திட்டம் நகரங்கள், பேரரசு பகுதிகளில் செயல்பட்டதாக பரணி குறிப்பிடுகிறார். சிலர் அதை மறுக்கிறார்கள். டில்லியில் மட்டுமே இருந்தது என்கிறார்கள். அதுவும் அவரது படைவீரர்கள் இருந்ததால்தான் என்கிறார்கள். டில்லியில் மட்டுமா படைவீரர்கள் இருந்தனர். அலாவுதீன் கில்ஜியின் ஏனைய ஆட்சிப் பகுதிகளிலும் அவர்கள் இருந்தனர். எனவே அத்திட்டம் அலாவுதீன் கில்ஜி ஆட்சிப் பகுதிகளில் முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதே சரியாகும்.

இனி முக்கிய விஷயமான இராஜபுத்திர நாடுகள் பற்றியும் அலாவுதீன்  கில்ஜி அவற்றுடன் நடந்து கொண்ட முறைகள் பற்றியும் விரிவாகப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் இங்கே தானே பத்மினி என்ற பத்மாவதி பேசப்படுகிறாள். இது குறித்து தெள்ளத் தெளிவாகவே நாம் பார்ப்போம்

இராஜபுத்திரர்கள்

தஞ்சாவூர் அரண்மனை நூலகத்தில் இருக்கும் பாலகாப்பம ஹரிஷியினால் எழுதப்பட்ட கஜசாஸ்திரம் எனும் நூலில் குரு, சூரஸேனம், அங்கம், வங்கம் முதலான அநேக தேசங்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

Puranic india or The old 56 kingdoms – Part i என்ற நூல் P. v. ஜெகதீச அய்யரால் 1918இல் வெளியிடப்பட்டது. றி.ஸி. ராம அய்யர் அண்ட்கோ நிறுவனம் நூறு ஆண்டுகளுக்கு முன் அதனை வெளியிட்டது. குருதேசம், சூரஸேனதேசம், குந்தி தேசம், குந்தலதேசம், ரிட தேசம், பாஹ்லீக தேசம், கோஸல் தேசம், பாஞ்சால தேசம், நிஷத் தேசம்

நிஷாத தேசம், சேதி தேசம், தசார்ஸி தேசம், விதர்ப்ப தேசம், அவந்தி தேசம், மாளவ தேசம், கொங்கணம் அல்லது சௌராஷ்ர தேசம், கூர்ஜா தேசம், ஆபிர தேசம், ஸால்வ தேசம், ஸிந்து தேசம், ஸௌவீர  தேசம், பாரஸீக தேசம், வநாயு தேசம், பர்பர தேசம், கிராத தேசம், காந்தார தேசம், மத்ர தேசம், காச்மீர தேசம், காம்போஜ தேசம், நேபாள தேசம், ஆரட்ட தேசம், விதேஹ தேசம், பார்வத தேசம், சீன தேசம், காமரூப தேசம், ப்ராக் ஜோதிஷ தேசம், ஸிம்ம தேசம், உத்கல தேசம், வங்க தேசம், அங்க தேசம் மகத தேசம், ஹேஹய தேசம், களிங்க தேசம், ஆந்த்ர தேசம், யவன தேசம், மஹாராஷ்ட்ர தேசம், குளிந்த தேசம், த்ராவிட தேசம், சோழ தேசம், ஸிம்மள தேசம், பாண்டிய தேசம், கேரள தேசம், கர்னாடக தேசம் என்ற 56 தேசங்கள். (புராதன இந்தியா அல்லது பழைய 56 தேசங்கள். பி.வி. ஜெகதீச அய்யர், சந்தியா பதிப்பகம், பதிப்பு 2004, முதல் பாகம் பக்கம் 40,41)

சீந தேசம் இந்தியாவின் வடகிழக்கில், ஸிம்மளம் தென் கிழக்கில், பாரசீகம் வடமேற்கில், காம்போஜம் வடக்கிலும் போக எஞ்சியது 52 தேசங்கள்.

காந்தார தேசத்தில் முஸ்லிம்கள் ஆட்சி இருந்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. மேலும் பி.வி. ஜகதீச அய்யர் தனது நூலில் இரண்டாம் பாகம் பக்கம் 158இல் சொல்கிறார்.

“ஆகிலும் வட இந்தியாவில் ஜைன மதமும் பௌத்த மதமும் படர்ந்து கொண்டே வருகின்றன. இதுவுமின்றி அநேக வருஷகாலங்களாய் துருஷ்கமதமும் (இஸ்லாம்) ஒவ்வோரிடத்திலும் பரவி வருகிறது. இந்த துருஷ்கர்களின் ஜாதியில் (முஸ்லிம்கள்) முன்பு உதித்த சில மஹான்கள், ‘நவாப்’ என்ற பட்டத்தைப் பெற்று இவ் இந்தியாவை அநேக இடங்களில் அநேக வருஷகாலம் பரிபாலனம் செய்து வந்தார்கள். அவர்களின் ஆசாரத்தையும் நடையுடைகளையும் நாம் கவனிக்காவிடினும் நமது தாய்பாஷைக்கு (வடமொழிக்கு, சமஸ்கிருதத்திற்கு) அவர்களால் செய்யப்பட்ட பேருதவியையும், சிறந்த ப்ராமணர்களுக்கு அவர்களாலேயே அங்கங்கு விடப்பட்டதான சொத்துக்களையும் நாம் ஒருக்காலும் மறக்கவே மாட்டோம். இது பி.வி. ஜததீச அய்யர் 100 ஆண்டுகளுக்கு முன் தனது நூலில் எழுதிய வாசகங்கள் ஆகும்.

56 தேசங்களில் பெயர்களையும் நினைவில் கொள்க. இனி ராஜபுத்திரர்கள் விஷயத்திற்கு வருவோம்.

ஹர்ஷர் (கி.பி. 606 &- 647) அரசவையிலிருந்த பாணர் எழுதிய ஹர்ஷ சரிதம் 7ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் நிலையை அறிய உதவுகிறது. சீனப் பயணி யுவான் சுவாங் எழுதிய சி&-யூ&-கி- ((Record of the western world) நூலும் மேலும் பல தகவல்களைத் தருகிறது. ஹர்ஷர் கி.பி. 643 இல் கன்னோசியில் புத்த மாநாடு நடத்தியவர். 1000 நாலாந்தா பல்கலைக்கழக மாணவர்களும், இருபது நாடுகளிலிருந்து அரசர்களும், 6000 புத்தத் துறவிகளும் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது. பொன்னும் மணியும் தானமளிக்கப்பட்டது. யுவான் சுவாங் யானையின் மீது ஏறி ஊர்வலமாகச் சென்றார். மாநாட்டில் கலந்து கொண்ட பிராமணர்கள் பொறாமையால் மாநாட்டுப் பந்தலைக் கொளுத்தி விட்டனர். (இந்திய வரலாறு, பேராசிரியர் கோ. தங்கவேலு, முதற்பதிப்பு 1976, மூன்றாம் பதிப்பு 2003, சென்னை, பக்கம் 445.) ஹர்ஷரையை கொல்ல சதி நடந்தது. (ஹர்ஷரை ஒரு வெறியர் கத்தியால் தாக்க முயன்றார்) சதியில் ஈடுபட்டவர்கள் (பிராமணர்கள்) நாடு கடத்தப்பட்டனர், சதிக்கு காரணமா தலைவர் தண்டிக்கப்பட்டார். (S.Beal, Buddhist Records of the western world, i, Page 219) ஹர்ஷர் கி.பி. 647இல் மறைந்தார். அவர் மறைவிற்குப் பின் வட இந்திய அரசியல் சிதைந்தது. ஹர்ஷருருக்குப் பின் வந்த அருச்சுனன் காலத்தில், வாங்-யுவான்-சி கன்னோசிக்கு வந்தான்.

சீனத்து வாங் &– யுவான் -& சியை கன்னோசியின் அர்ச்சசுனன் எதிர்த்தான். சீனனுக்கு உதவியாக நேப்பாள மன்னர் படை உதவி அளித்தார்; 7000 குதிரை வீரர்கள் அளித்து உதவினார். காமரூபத்தை அரசு செய்த  பாசுரவர்மனும் சீனர்களுக்கு இதுபோன்ற உதவியை அளித்தார்.

சீனத்து இளவரசியை மணந்திருந்த திபெத்து நாட்டு மன்னன் சிராங்-தான்- காம்போ & நன்கு பயிற்சி பெற்ற 1700 படைவீரர்களை சீனர்களுக்கு அளித்தான்.

பல்லாயிரம் இந்தியர் படுகொலை செய்யப்பட்டனர்; 12000 இந்தியர்கள் 13000 குதிரை, யானைப் படையினர் அடிமைகளாகச் சீனாவிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஹர்ஷரின் தலைமையில் ஒன்றுபட்டு ஒரு பேராட்சியின் கீழ் இருந்த வட இந்தியா, ஹர்ஷரின் மறைவிற்குப் பின்னால், சீனர்களின் தாக்குதலால் சிதறுண்டு போயிற்று; சீரழிந்தநிலை உருவாயிற்று; வட நாடு முழுவதும் மிருந்த சிற்றரசுகளும் பேரரசுகளும் பேராளுமை பெற்றிட போராட்டங்களில் பூசல்களில் ஈடுபட்டன.

கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1918 பிப்ரவரியில் டி.ஆர். பண்டார்கார் பழங்கால இந்தியா குறித்து நான்கு சொற்பொழிவுகளைத் தந்துள்ளார். Lectures on the Ancient History of india On the period from 650 to 325 B.C.. என்ற நூலாக வெளிவந்தது. அதன் முதல் பதிப்பு 1919 இல் வந்தது. 1966இலும், 1994லும் தொடர்ந்து பதிப்புகள் வெளிவந்தது. 1994இல் வெளிவந்த மூன்றாம் பதிப்பில் பக்கம் 56இல் Political History என்ற இரண்டாவது சொற்பொழிவில் D.R. பண்டார்கார் பின்வருமாறு கூறுகிறார்:

‘‘நாடு சிறு சிறு குழுக்களாக, தலைமைத்துவம் நிறைந்த தலைவர் இல்லாததாக, ஒன்றை ஒன்று எதிர்த்துப் போரிடுபவையாக இருந்தது. இதனை புராணங்களும் கூறுகிறது’’

ஹர்ஷரது காலத்திற்கும் இஸ்லாமியர்களின் ஆட்சிக் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் வட இந்தியாவில் அரசோச்சிய பல அரசவம்சங்கள் ராஜபுத்திர குலத்தைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது.

கல்ஹணரின் ‘இராஜதரங்கிளி’ (அரசர்களின் ஆறு) நமக்குக் கிடைத்துள்ள மிகத் தொன்மையான கஷ்மீரின் வரலாறு ஆகும். கி.பி. 1148&-1150க்குள் எழுதப்பட்ட இந்தக் கவிதை வரலாறு ‘சரித்திரத் துறைக்கு இந்து இந்தியா அளித்துள்ள ஒரே காணிக்கை’ என்று எச்.ஜி.ராலின்ஸன் கூறுகிறார்.

தெளிவான கால வரிசை வரலாறுகள் இல்லாத காரணத்தால் பண்டைய கால இந்திய வரலாற்றைத் திட்ட வட்டமாகத் தெரியமுடியவில்லை. புராணக் கதைகளில் வரும் அரசர்களின் சாதனைகளின் செய்திக் கோவையே வரலாறாகக் கருதப்பட்டது. அறிவியல் அடிப்படையில் வரலாறு எழுதத் தேவையான செய்திகள் மிகவும் குறைவாகவே உள்ளது. வட மொழி இலக்கியத்தில் காலம் முழுவதிலுமே நம்பகமான வரலாற்று ஆசிரியர் என்று கருதப்படக் கூடியவர் யாரும் இலர்.

(சோம்நாத்தர் கல்ஹணர், தமிழாக்கம் எஸ். கிருஷ்ணமூர்த்தி, சாகித்திய அகாதெமி, சென்னை 1983, பக்கம் 4)

தொடரும்.

Comments are closed.