முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு அளித்து வந்த நாகூர் தர்கா முன்னாள் நிர்வாகிகள் மூன்று பேருக்கு தர்கா சாஹிப்மார்கள் கண்டனம்.
உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் முன்னாள் தலைவர் காமில் சாஹிப், அவரது மகன் செய்யது முகமது கலீபா சாஹிப், ஹாஜ் வாப்பா ஆகியோர் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில் நாகூர் தர்கா ஆதினஸ்தர்கள் சங்கம், நாகூர் தர்கா சாஹிப் மார்கள் முன்னேற்ற சங்கம், தமிழக தர்காக்கள் பேரவை ஆகிய அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் முதல்வரை சந்தித்த நாகூர் தர்கா ஆதினஸ்தர்கள் சங்கம் செயலாளர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப்பை பொறுப்பில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.
You must be logged in to post a comment.