
கேரளாவைச் சார்ந்த மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி 2008 பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை கைதியாக உள்ளார். இந்த வழக்கில் ஜூலை 2014இல் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியபோதும் கர்நாடகாவை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
வழக்கின் விசாரணையை நான்கு மாதங்களில் முடித்து விடுவதாக கர்நாடக அரசாங்கம் அப்போது நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது உடல்நிலை, தனது பெற்றோரின் உடல்நிலை, கர்நாடகாவில் இருப்பதினால் ஏற்படும் அதிகப்படியான செலவுகள் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி கேரளா செல்வதற்கு தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மதானி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் பெலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு ஜூலை 8 வரை கேரளாவில் மதானி தங்கி இருப்பதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர். இதற்கான செலவுகளை அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.