அலிகர் பல்கலைக்கழகத்திற்கு அச்சுறுத்தல்

அலிகர் பல்கலைக்கழகத்திற்கு அச்சுறுத்தல்

இந்தியாவில் சிறப்பான முறையில் செயல்படும் முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் மீது சங்பரிவார் அமைப்புகளுக்கு எப்போதும் ஒரு கண் உண்டு. அவற்றில் மிக அதிகமாக வேட்டையாடப்படும் இரண்டு கல்வி நிறுவனங்கள், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் பல்கலைக்கழகமும், டெல்லியில் உள்ள ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகமுமாகும். இவை இரண்டும் இந்திய சுதந்திரத்திற்கு முன்பே உருவாக்கப்பட்ட பழமையான கல்வி நிலையங்கள்.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இந்த கல்வி நிறுவனங்களுக்கு எதிரான சங்பரிவாரின் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

அலிகர் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்துதான் சங்பரிவாரை அதிகம் எரிச்சலூட்டும் விஷயம். இதற்கு எதிராக நரேந்திர மோடி அரசே உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. அலிகர் பல்கலைக்கழகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து தேவையில்லை என்றும் அதன் சிறுபான்மை அந்தஸ்தை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரி மத்திய அரசு சமர்ப்பித்த மனுவை உச்ச நீதிமன்றம், அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியுள்ளது. அலிகர் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை நீக்கம் செய்வதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதற்கு எதிராக கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், பல்கலைக்கழக நிர்வாகிகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்ற மோடி அரசு, அலிகர் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை நீக்க வேண்டும் என்று கோரியது.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்