அல்குர்ஆனின் தனிப்பெரும் பண்புகள்

அல்குர்ஆனின் தனிப்பெரும் பண்புகள்

3. நிகரற்ற அற்புத நூல்

மனிதகுல வரலாறு நெடுகிலும் உலகுக்கு இறைத்தூதர்களாக இறைவனால் அனுப்பப்பட்டவர்கள் தமது தூதுத்துவத்தை உறுதிப்படுத்தி மக்களை சத்திய மார்க்கத்தில் இணைப்பதற்காக பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார்கள். அந்த ஆற்றலை அல்லாஹ் ஒவ்வொரு இறைத்தூதருக்கும் வழங்கியிருந்தான்.

இறுதி இறைத்தூதராக வந்த முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு தம் தூதுத்துவத்தை உறுதிப்படுத்த வழங்கப்பட்ட மாபெரும் அற்புதமாகவே அல்குர்ஆன் காணப்படுகிறது.

முன்னைய இறைத்தூதர்களுக்கு தடியை பாம்பாக மாற்றுதல், மரணித்தவரை மீண்டும் உயிர் பெறச் செய்தல், நோயாளிகளை தொடுவதன் மூலம் சுகமடையச் செய்தல் போன்ற பௌதீக ரீதியான அற்புதங்கள் மாத்திரமே வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அல்குர்ஆன் என்பது அறிவுப்பூர்வமான அற்புதமாக திகழ்கின்றது. புலக்காட்சிகள் மூலம், செய்கைகள் மூலம் அற்புதத்தை நிகழ்த்தாமல் அல்குர்ஆன் மனித அறிவின் மூலம் புரிந்து கொள்கின்ற அற்புதமாகவே திகழ்கின்றது.

அற்புதம் என்றால் இன்னொருவரால் ஒருபோதும் செய்ய முடியாத ஒன்றாக இருக்க வேண்டும். அதே சமயம் பிறரை பிரமிக்கச் செய்யும் அளவு உயர்ந்ததாகவும் அது அமைய வேண்டும். அவ்வாறு அமைகின்ற போதே அந்த அற்புதம் தூதுத்துவத்தை உறுதிப்படுத்துவதாகவும் சத்திய மார்க்கத்தை உண்மைப்படுத்துவதாகவும் அமையும்.

அல்குர்ஆன் ஓர் அற்புதம் என்பதனை அல்குர்ஆனே குறிப்பிடுகின்றது. இந்த பிரபஞ்சத்தில் யாருக்காவது அல்குர்ஆன் அற்புதம் என்பதில் சந்தேகம் இருந்தால் அதே போன்ற ஒன்றை கொண்டுவாருங்கள் என்று அது சவால் விடுகின்றது.

தெளிவான அரபு மொழியில் இறங்கிய இந்த அல்குர்ஆனைக் கண்டு அரபு மொழியில் கைத்தேர்ந்த முழு அரேபிய சமூகமும் பிரமித்து நின்றது. குறிப்பாக அரபு மொழிப் புலமையில் உச்சத்தில் இருந்த குறைஷியர்கள் கூட அல்குர்ஆனின் முன்னால் வாயடைத்துப் போனார்கள்.

ஆரம்ப கட்டமாக அல்குர்ஆன் தன்னை பொய்ப்பித்த சமூகத்தைப் பார்த்து

“நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஒரு குர்ஆனைக் கொண்டுவாருங்கள்” (அத்தூர் : 34)

என்று சவால்விட்டது.


முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்