அழகிய கடன்

அழகிய கடன்

ஒருநாள் மாலை முஸ்தஃபா தம் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்றிருந்தார். அன்று விடுமுறை நாள். அதனால் பீச்சில் ஜேஜே என்று கூட்டம். கரீமும் ஸாலிஹாவும் மணலில் விளையாடிக் கொண்டிருந்தனர். குதித்து ஓடிய கரீம் கால் தடுக்கி விழுந்து, முழங்காலில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது. இலேசாக இரத்தம். அதனால், ‘ஓ’வென்று அழ ஆரம்பித்துவிட்டான்.

அவனுடைய அம்மா ஓடி வந்து அவனைத் தூக்கி, மடியில் அமர்த்தி, சமாதானம் சொல்லியும் அவன் அழுகை அடங்கவில்லை. அப்பொழுது முஸ்தஃபா, ‘அழாமல் இருந்தால் உனக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தருவேன்’ என்று சொன்னதும்தான் அவனது அழுகை ஒருவாறு நின்றது. சொன்னது போலவே, வீடு திரும்பும் வழியில் ஐஸ்க்ரீம் கடையில் அவர் காரை நிறுத்தியதும், ‘டாடி! எனக்கும் ஐஸ்க்ரீம்’ என்றாள் ஸாலிஹா.

‘நீயா கீழே விழுந்தே? உனக்கு கிடையாது’ என்றான் கரீம்.

‘அப்போ உன் ஐஸ்க்ரீமிலிருந்து எனக்கு கொஞ்சம் தா. வேணும்னா அதைக் கடனா வெச்சுக்கோ’ என்றாள் ஸாலிஹா.

‘சாப்பிட்டுக் கரைஞ்சிடுமே. எப்படி திருப்பித் தருவே?’ என்று கேட்டான் கரீம்.

யோசித்தாள் ஸாலிஹா. ‘வேறு என்னமாச்சும் ஸ்பெஷலா தருவேன்.’
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்