‘இந்துஸ்தான் இந்துகளுக்கே’ என்றும் இங்குள்ள முஸ்லிம்கள் பாகிஸ்தான் செல்லலாம் என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய அஸ்ஸாம் மாநில ஆளுநர் பி.பி. ஆச்சார்யாவை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நேற்று (நவம்பர் 24) அஸ்ஸாமில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. ஆளுநரின் இந்த கருத்துகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர் குரல்கள் எழுந்துள்ளன.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அஸ்ஸாம் மாநில தலைவர் அமீனுல் ஹக் ஆளுநரின் இந்த வகுப்புவாத பேச்சை கண்டித்து நவம்பர் 22 அன்று அறிக்கை வெளியிட்டார். நேற்றைய தினம் பக்சா மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கண்டன பேரணி நடத்தப்பட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் ஆளுநரின் கருத்துகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தின் இறுதியில் ஆளுநரின் உருவ பொம்பை எரிக்கப்பட்டது. பக்சா மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் ஜாகிர் தலைமையில் இந்த கண்டன பேரணி நடைபெற்றது. ஏறத்தாழ இருநூறு நபர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதனிடையே தான் அவ்வாறு கூறவில்லை என்றும் தனது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் வழக்கமான விளக்கத்தை ஆளுநர் கொடுத்துள்ளார்.
You must be logged in to post a comment.