ஆப்ரேஷன் கரோகே: அரசியல் தரகர்களாக நடிகர்கள்!

ஆப்ரேஷன் கரோகே: அரசியல் தரகர்களாக நடிகர்கள்!

இந்தியாவில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒரு புறம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் அரசியல் சார்ந்த திரைப்படங்களில் நடித்து மூன்று மணி நேரத்திற்குள் நாட்டை திருத்தும் யோசனையை அரசியல் சினிமா ஞானிகளான சில டைரக்டர்களின் உதவியுடன் நடிகர்கள் வெளிப்படுத்தி தங்களை தலைவனாக காட்டிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி நாட்டில் எந்த ஒரு திட்டம், பிரச்சனை வந்தாலும், அதுபற்றி எதுவும் தெரியாவிட்டாலும் டிவிட்டரில் கருத்திடுவது இந்த நடிகர்களின் வாடிக்கை.

உதாரணத்திற்கு, நாட்டு மக்களின் பொருளாதாரத்தையே சிதைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பு நடவடிக்கைக்கு பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர் கான், ஷாருக் கான், சல்மான் கான், ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் தொடங்கி தமிழ் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஆர்.ஜே. பாலாஜி வரை அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். பின்னர் தமிழ் நடிகர்களான இம்மூவரும் தங்கள் கருத்தை வாபஸ் பெற்றனர் என்பது வேறு கதை. ஒரு விசயம் பற்றி தெரியுமோ… தெரியாதோ… ஒரு கருத்தை போட்டுவிட்டால் அதை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கி விளம்பரப்படுத்திவிடும் என்பதால் அவர்கள் இதே பாணியை தொடர்கின்றனர்.

இதன் மூலம் பிரபலங்கள் பணம் சம்பாதிக்க தொடங்கிவிட்டனர் என்பதை நம்ப முடிகிறதா? ஆம், கோப்ரா போஸ்ட் என்ற பிரபல புலனாய்வு இணையதளம் இதை அம்பலப்படுத்தி இருக்கிறது. பாலிவுட்டின் ஸ்டார் ஹீரோக்களை தவிர்த்து அடுத்த கட்டத்தில் உள்ள பிரபல நடிகர், நடிகைகளிடம் ‘ஆபரேஷன் கரோகே’ என்ற ஸ்டிங் ஆபரேசனை கோப்ரா போஸ்ட் நடத்தியுள்ளது. கோப்ரா போஸ்ட் செய்தியாளர்கள் தங்களை பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளின் செய்தித்தொடர்பாளர்கள் என கூறிக்கொண்டு டிவிட்டரில் இலட்சக்கணக்கான பாலோயர்களை கொண்டுள்ள பாலிவுட் பிரபலங்கள், தொலைக்காட்சி பிரபலங்கள், நடன கலைஞர்கள், பாடகர்களை அனுகி தங்கள் கட்சிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்திடுமாறு கேட்டுக் கொண்டனர்.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்