இணைய உலா

இணைய உலா

Senthil Arasu
அவருக்கும் கூட்டுப் படுகொலைகளுக்கும் எப்போதும் பொருந்திப் போகும். அவரின் அரசியல் என்பதே மனித உயிர்களின் மீதானது. இதையும் அவர் உள்ளூர ரசிப்பார் என்றே நம்புகிறேன்..

Shanmugapriyan Sivakumar
42 வீரர்களுக்காக போர் தொடுப்போம் என்கிறீர்கள்

800 மீனவர்களுக்காக இலங்கை மீது போர் தொடுக்க ஏன் மனம் வரவில்லை ? என்று கேட்கிறோம்…

பதில் சொல்லாமல் ” தேசவிரோதிகள் -‘நக்சல்கள், -சமூகவிரோதி ” என்று பதற்றத்தில் பட்டம் தருகிறீர்கள்…

Loganathan Murugesan
உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது -& மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் #காவிரி பிரச்சனையில் மிறிலி-லுக்கு எதிராக போராட்டம் செய்யும் போது விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். அதை அரசியலாக்கக்கூடாது என்று கூப்பாடு போட்டவர்கள் பாஜகவினர்…

Vijayasankar Ramachandran
அமைதிக்கான விருதை மோடிக்கு வழங்கி இருக்கிறது தென் கொரியா. அவருடய அமைதிக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்.

Sundar Rajan
நாம் எப்படிப்பட்ட “அறிவார்ந்த ஆளுமைகளால்” ஆளப்படுகிறோம் என்பதை தெரிந்துகொள்ள நிதின் கட்கரியின் இன்றைய அறிக்கையே போதுமானது. இந்தியாவிலிருந்து மேற்கு நோக்கி பாயும் நதிகளில் அணைகள் கட்டி பாகிஸ்தானிற்கு தண்ணீர் செல்லாமல் தடுத்துவிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

அவருக்கு ஒரு வார்த்தை: மேற்கு நோக்கி பாயும் ஐந்து நதிகளின் நீரை பகிர்ந்துகொள்ள இந்தியா பாகிஸ்தான் இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் சர்வதேச மேற்பார்வையில் உள்ளவை, அவை “ஹெல்சின்கி சர்வதேச நீர் பங்கிட்டு விதிகளின்” கீழ் வருபவை, எந்த ஒரு தனிப்பட்ட நாடும் அந்த ஒப்பந்தங்களை நினைத்தபடி மீறிவிடமுடியாது, அப்படி செய்தால் “சர்வதேச புறக்கணிப்பை” எதிர்கொள்ள நேரிடும்.

ஒருவேளை கட்கரி சொன்னபடி நடந்தால், கங்கை நதியின் துணைநதிகள் உற்பத்தியாகும் நேபாள் நாட்டில் அவற்றின் குறுக்கே அணைகள் கட்டப்படும், பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே சீனா அணை கட்டும், மொத்தமாக வட இந்தியா முழுவதற்கும் தண்ணீர் கிடைக்காமல் போய்விடும்.

மோடி, பாகிஸ்தான் மீது எந்த ஒரு தாக்குதலையும் தொடுக்கும் முன்னர், தான் முன்கூட்டியே அறிவித்து மக்களின் நன்மதிப்பை பெறவேண்டும் என்கிற கூற்றை தவிர கட்கரியின் வார்த்தைகளை வேறு எப்படி பார்ப்பது?