இந்தியில் 2,300 பக்கத் தீர்ப்பு: மற்றொரு சதி!

இந்தியில் 2,300 பக்கத் தீர்ப்பு: மற்றொரு சதி!

28 ஆண்டுகளாக நடந்து வந்த  பாபரி மஸ்ஜித் இடிப்பு கிரிமினல் சதி வழக்கில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 குற்றவாளிகளையும் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இது ஒரு அரசியல் தீர்ப்பேயன்றி வேறில்லை என நீதியை நேசிக்கும் அனைத்துத் தரப்பு மக்களாலும் இந்தத் தீர்ப்பு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

தீர்ப்பு வழங்கப்பட்ட மொழியே மற்றொரு சதி. காரணம், அது இந்தியில் இருந்தது. இந்திய ஒன்றியத்தில் உள்ள பெரும்பான்மையான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மொழி இந்தி அல்ல. பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தத ஒன்றாகும். பள்ளி இடிக்கப்பட்ட நிகழ்வு பாதிக்கப்பட்ட சமூகத்துடன் அவர்களுக்குத் துணையாகவும் ஆதரவாகவும் நிற்கும் சக இந்திய குடிமக்களின் உணர்வுகளுடன், மன வேதனைகளுடனும்  பின்னிப் பிணைந்ததாகும். இந்திய ஒன்றியத்தின் பெரும்பான்மையான பிரதேசங்களில் உள்ள மக்கள் இந்தத் தீர்ப்பின் முழு சாராம்சத்தையும் உடனே புரிந்து கொள்ளக்கூடாது என்ற நோக்கத்தில்  வேண்டுமென்றே இந்தி மொழியில் வழங்கப்பட்டுள்ள தாகத் தெரிகிறது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் தலைமை குற்றவியல் நடுவர் (சி.ஜே.எம்) நீதிமன்றம் வரை நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் தீர்ப்புகள் பெரும்பாலும் அந்தந்த 2020 அக்டோபர் 16-31 புதிய விடியல் மாநில மொழிகளிலேயே (தமிழ்/கன்னடம்) இருக்கும். முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி (பி.டி.ஜே), கூடுதல் மாவட்ட நீதிபதி (ஏ.டி.ஜே) மற்றும் சார்பு நீதிமன்றங்களில், குறிப்பாக சிபிஐ, என்டிபிஎஸ் போன்ற சிறப்பு நீதிமன்றங்களில் நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் தீர்ப்புகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கும். கேரளாவில் முதல் வகுப்பு நீதித்துறை நடுவர் (ஜே.எம்.எப்.சி), அதாவது கீழ் நீதிமன்றம் முதல் பி.டி.ஜே. வரை நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் உள்ளது.  மகாராஷ்டிராவில் மராட்டிய மொழியில் வழக்குரைஞர்களால் விண்ணப்பங்கள்/ மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டாலும் தீர்ப்பு ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் அவர்கள் பி.டி.ஜே. அளவில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்தி உத்தர பிரதேசத்தில் கீழமை (விசாரணை) நீதிமன்றங்களின் அலுவல் மொழியாக இருந்தாலும், ஏ.டி.ஜே. தரத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி தீர்ப்பை ஆங்கிலத்தில் அளித்திருக்க வேண்டும், ஏனெனில் இவ்வழக்கின் தீர்ப்பு அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது.

எளிதில் புரிந்துகொள்ள, ஆர்.டி.ஐ.யிலிருந்து ஒரு உதாரணத்தை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.  தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நாம் விவாதிக்கும்போது, ​​அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பேச்சுரிமை மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையான ஷரத்து 19(1)(ஏ)-யின் கீழ் வருகிறது. இந்த உரிமையை நாம் செயல்படுத்த வேண்டுமானால் நாம் அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். இதைத் தான் ஆங்கிலத்தில் “ஸிவீரீலீt ஜிஷீ ரிஸீஷீஷ்” அதாவது “அறிந்து கொள்ளும் உரிமை” என்று கூறுவார்கள். ஆகவே அறிந்து கொள்ளும் உரிமை என்பது மிகவும் முக்கியமானது. அதனடிப்படையில் தான் ஆர்.டி.ஐ சட்டம் உருவாக்கப்பட்டது.

தீர்ப்பில் உள்ள எல்லா சாராம்சங்களையும் தீர்ப்பு வெளிவந்த உடனேயே தெரிந்து கொள்ள வேண்டுமென்பது என்னுடைய அறிந்து கொள்ளும் உரிமை தொடர்புடையதாகும். ஏனென்றால் அன்றாடம் வெளிவந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தீர்ப்புகளைப் போன்று பத்தோடு பதினொன்றாக உள்ள தீர்ப்பு அல்ல இது. மாறாக, இந்தத் தீர்ப்பை எனது உள்ளக் கூட்டில் நிரம்பி வழிந்து கொண்டிருந்த சொல்லொண்ணா வேதனைகளுடனும் வலிகளுடனும்      பேசவிருந்த நம்பிக்கை வரிகளாகத் தான் இந்தத் தீர்ப்பை நான் எதிர்பார்த்திருந்தேன்.

இது எனது உரிமை மட்டுமல்ல;  இந்திய ஒன்றியத்தில் ஆங்கிலத்தைப் பொதுவான தொடர்பு மொழியாகக் கொண்ட இந்தி அல்லாத மற்ற மொழிகள்  பேசும் மக்களின் உரிமை. இப்போது, ​​ஆங்கில மொழிபெயர்ப்பு யாரோ ஒருவரால் செய்யப்படும் வரை அவர்கள் காத்திருக்கும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில் இந்தி மொழியில் தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு அணுகுமுறையைப் பார்க்கும்போது தீர்ப்பின் முழு சாராம்சத்தினையும் இந்தி அல்லாத மற்ற மொழிகள் பேசும் மக்கள் உடனடியாக அறிந்து கொள்ளக்கூடாது என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

இரண்டாவதாக, இதுபோன்ற பின்வாசல் வழியாக மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் செயலாகும்.

மூன்றாவதாக, கடும் விமர்சனங்களில் இருந்து தப்பிக்கும் விதமாக நீதியை நேசிக்கும் சர்வதேச சமூகம் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு இத்தீர்ப்பின் முழு சாராம்சமும் உடனடியாகக் கிடைத்து விடக்கூடாது என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

நான்காவதாக, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழக்கில் சிறப்பு அந்தஸ்து வழங்கி அமைக்கப்பட்ட லக்னோ சி.பி.ஐ. “சிறப்பு” நீதிமன்றம் ஆங்கிலத்தில் தீர்ப்பு வழங்க முடியாத ஒரு அவல நிலை நிலவுகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதன் சிறப்பு அந்தஸ்திற்கு ஒரு களங்கத்தை இந்த இந்தித் தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநில லக்னோ சி.பி.ஐ. “சிறப்பு” நீதிமன்றம், முதலில் ஆங்கிலத்தில் தீர்ப்பு வழங்குவதைக் கற்பது நன்று; பின்னர் நீதி செலுத்துவது எப்படி என்பதைக் கற்றுக் கொள்வது மிக மிக நன்று. [/groups_member]
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்