இந்துக்களின் ரேஷன் பொருட்களை இஸ்லாமியர்கள் உண்டு செரித்து விட்டனர் என இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

உத்தர பிரதேச மாநிலம், குஷிநகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் சார்பு அரசியல் (சிறுபான்மையினருக்கு ஆதரவான) கிடையாது என்று கூறிய அவர், 2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் ரேஷன் பொருட்களைப் பெற்றீர்களா? என மக்களை நோக்கி கேள்வியெழுப்பினார். பின்னர், அந்தக் காலகட்டத்தில் அப்பா ஜான் (உருது மொழியில் இஸ்லாமியர்கள் தந்தையை அழைக்கும் சொல்) என்று அழைப்பவர்கள் தான் ரேஷன் பொருட்களை உண்டு செரித்தனர். ஸ்ரீநகருக்கு வர வேண்டிய ரேஷன் பொருட்கள் அனைத்தும் நேபாளத்துக்கும், வங்காளதேசத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத்தின் சர்ச்சைக்குரிய கருத்துக்குப் பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.