டிஜிட்டல் இந்தியாவின் மாபெரும் முன்னேற்றமாக இந்தியாவின் இணையதள பயனாளர்களில் பெரும்பகுதியினரை சிறைக்குள் தள்ளக்கூடிய முயற்சியினை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதாவது இனி இந்தியாவில் தடை செய்யப்பட்ட இணையதளங்களை பார்வையிட்டால் மூன்று வருட சிறை தண்டனையும் மேலும் மூன்று லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம்.
இதன் படி தடை செய்யப்பட்ட ஒரு டாரண்ட் தளத்தை பார்வையிட்டாலே ஒருவரை குற்றவாளியாக்கிவிடும். முன்னதாக தடை செய்யப்பட்ட ஒரு தளத்தை பார்வையிட்டால் இந்த தளம் தொலை தொடர்புதுறையினால் தடை செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி மட்டும் தெரிவிக்கப்பட்டிருக்கும். ஆனால் தற்பொழுது
“This URL has been blocked under the instructions of the Competent Government Authority or in compliance with the orders of a Court of competent jurisdiction. Viewing, downloading, exhibiting or duplicating an illicit copy of the contents under this URL is punishable as an offence under the laws of India, including but not limited to under Sections 63, 63-A, 65 and 65-A of the Copyright Act, 1957 which prescribe imprisonment for 3 years and also fine of upto Rs. 3,00,000/-. Any person aggrieved by any such blocking of this URL may contact at urlblock@tatacommunications.com who will, within 48 hours, provide you the details of relevant proceedings under which you can approach the relevant High Court or Authority for redressal of your grievance”
என்ற செய்தி தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் தடை செய்யப்பட்ட ஒரு தளத்தை பார்வையிடுதல், அதிலிருந்து பதிவிறக்கம் செய்தல், அதனை பரப்புதல், அந்த தளத்தை அல்லது தளத்தில் உள்ள தகவல்களை பிரதி எடுத்தல் ஆகியவை 1957 காப்புரிமை சட்டத்தின் பிரிவுகள் 63, 63-A, 65 and 65-A ஆகியவற்றின் படி குற்றமக கருதி மூன்று வருட சிறை தண்டனை மற்றும் மூன்று லட்ச ரூபாய் அபராதம் வித்திக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை குறித்து அதிருப்தியுற்றோர் urlblock@tatacommunications.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான இணையதளங்கள் DNS FIltering என்ற முறைப்படி தடை செய்யபபட்டுள்ளன. இந்த முறைப்படி ISP எனப்படும் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட தளங்களின் பெயரை தங்களது பட்டியலில் சேர்த்துக்கொள்ளும். இந்த ISP யின் DNS ஐ பயன்படுத்தி இந்த தளங்களை பார்வையிட விரும்புபவர்களுக்கு இந்த தளங்கள் முடக்கப்படும். ஆனால் இதனை எளிதாக கூகிளின் DNS (8.8.8.8 / 8.8.4.4) மற்றும் இதர DNS மூலம் பார்வையிடலாம். இன்னும் தடை செய்யப்பட்ட தளங்கள் HTTPS பாதுகாப்பு பெற்றிருந்தால் அந்த தளங்களின் பெயர் முன்னாள் kttps:// என்று சேர்த்து பார்வையிடலாம்.
தற்பொழுது ISP யினை சார்ந்திராமல் Internet Gateway எனப்படும் இணையதள வாசல்களை நிர்வகிக்கும் பெரும் நிறுவனங்களான டாடா, ஏர்டெல் போன்ற நிறுவனகளின் உதவியை அரசு நாடியுள்ளது என்று தெரிய வருகிறது. தற்போது தெரிவிக்கப்படும் தடை செய்தி இணையதளங்களின் முடக்கம் Gateway அளவில் செய்யப்படுகிறது என்று தெரிய வருகிறது.
தற்போது இந்த தளங்களை பார்வையிடுபவர்களுக்கான தண்டனைகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவை எவ்வாறு கடை பிடிக்கப்படும் என்பது குறித்து எந்தவித தகவல்களும் தெளிவாக இல்லை. இன்னும் இது வெறும் செய்தி மட்டுமா இல்லை அரசின் கொள்கையா என்பது குறித்தும் எந்த ஒரு தெளிவான தகவலும் வெளியிடப்படவில்லை.
தங்கள் ஆட்சியின் பெரும் சாதனை டிஜிடல் இந்தியா என்று பா.ஜ.க அரசு பீற்றிக் கொண்டிருக்கும் வேலையில், பா.ஜ.க கூறும் டிஜிட்டல் இந்தியா என்பது இணையதள கட்டுப்பாடு என்று இதன்மூலம் தெளிவாக தெரியவருகிறது. இந்த தடை என்பது வெறும் பொழுது போக்கிற்கும் சினிமா பதிவிறக்கத்திற்கும் மட்டுமான தடை என்று எடுத்துக்கொள்ள முடியாது. இந்த சட்டம் மூலம் விக்கிலீக்ஸ் போன்ற அரசின் தவறான கொள்கைகளை பற்றி தகவல் வெளியிடும் தளங்களும் முடக்கப்படும்.
மக்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பகிரவும் தங்களது அறிவை தேடி சுதந்திரமாக திரியும் ஒரே இடமாக இணையதளம் இருந்துவரும் இந்தக் காலங்களில் இத்தகைய சட்டங்கள் மூலம் அறிவுக்கும் தடை போடப்படும் என்பது வருத்தம். இந்தியாவிலும் சீனா போன்ற ஒடுக்கப்பட்ட இணையதள அனுபவத்தை மக்கள் பெறப்போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று உணர முடிகிறது.
இனி உட்காருவதற்க்கு நிற்பதற்கு மத்திய அரசின் அனுமதி வாங்கனும்னு சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இனி தடை செய்யப்பட்ட இணைய தளங்களை பார்வையிட்டால் 3 வருட சிறை – Puthiya Vidial, Puthiya Vidiyal
இனி தடை செய்யப்பட்ட இணைய தளங்களை பார்வையிட்டால் 3 வருட சிறை – Puthiya Vidial, Puthiya Vidiyal
இனி தடை செய்யப்பட்ட இணைய தளங்களை பார்வையிட்டால் 3 வருட சிறை – Puthiya Vidial, Puthiya Vidiyal