இனி வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கோடு இணைக்கப்படும்: தவிர்ப்பது எப்படி?

0

கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய போது பலரும் ப்ரைவசி குறித்த தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர். அதற்கு பதிலாக வாட்ஸ்அப் தரப்பு பயனலார்களின் தகவல்கள் ஒரு போதும் விளம்பர தேவைகளுக்காக பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் எப்போதும் போலவே அவர்களின் பிரைவசிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறியிருந்தது.

தற்போது இதற்கு நேர் மாற்றமாக வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கோடு இணைக்கப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு செய்துள்ளது. இதில் ஒருவரது வாட்ஸ்அப் அலைபேசி எண், அவரது நண்பர்கள் மற்றும் அவரது தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்குடன் பகிரப்படும். பின்னர் ஃபேஸ்புக் இந்த தகவல்களை பயன்படுத்தி தனது பக்கத்தில் ஒருவருக்கான விளம்பரங்கள், நட்புப் பட்டியல் ஆகியவற்றைக் காட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பாக ஃபேஸ்புக் பிரவசி பாலிசியின் மாற்றத்தை பயனாளர்களிடம் காட்டி ஒப்புதல் வாங்குகிறது வாட்ஸ்அப். இதில் தங்களது வாட்சைப் தகவல்களை ஃபேஸ்புக்கோடு பகிர விருப்பமில்லை என்று தேர்வு செய்தவர்களுக்கு இப்போது பிரச்சனை இல்லை. எபோதும் போல எதையும் படிக்காமல் “I Agree” என்று தேர்வு செய்தவர்களுக்கு 30 நாள் கேடு கொடுத்துள்ளது ஃபேஸ்புக்.
இதற்குள் தங்களது தேர்வை மாற்றிக்கொள்ளலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

உங்களது தெரிவை மாற்ற வேண்டுமென்றால்:
Whatsapp > Settings > Account > சென்று “Share My Account Info” தேர்வு செய்யப்பட்டிருந்தால் அதனை நீக்கிவிடுங்கள். இருந்தாலும் ஃபேஸ்புக்கின் இந்த நிலை பலருக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. பலர் வாட்ஸ்அப் இல் இருந்து விலகி டெலிகிராம் செயலிக்கு மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.