உத்திர பிரதேச பாஜக எம்.பி. மீது கலவர வழக்கு

உத்திர பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை பாஜக எம்.பி.ராகவ் லகன்பால் தலைமையில் நடைபெற்ற அம்பேத்கர் நினைவு ஊர்வலத்தில் வன்முறையை தூண்டியதற்காக ராகவ் லனகன்பால் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

தூத்லி கிராமத்தில் கல்வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இந்த வன்முறையில் பலர் காயமடைந்துள்ளனர். சர்ச்சைக்குரிய ஒரு பகுதி வழியே தாங்கள் செல்வோம் என்று பாஜக குண்டர்கள் கூற அதனை மற்ற தரப்பு மறுத்துள்ளது. முன்னதாக யோகி அதித்யனாத்தின் வெற்றி ஊர்வலத்தின் பாஜக குண்டர் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. (பார்க்க செய்தி). மேலும் அவர்கள் அவ்வழியாக செல்ல விடாமால் தடுப்பதற்காக சாலையின் குறுக்கே டிராக்டரை நிறுத்தியுள்ளது.

இதனையடுத்து அபப்குதி பாஜக எம்.பி.லகன்பால் உட்பட பாஜக தொண்டர்கள் அங்கு கூடியுள்ளனர். மேலும் தங்களை அவளியே செல்ல அனுமதிக்குமாறு காவல்துறையிடம் முறையிட்டுள்ளனர். இந்த ஊர்வலத்திர்கே அனுமதிக்க மறுக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் கூறும் பாதை வழியாக செல்ல காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

அப்போது லகன்பால் அவரது ஆதரவாளர்களை அவ்வழியாக செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. மேலும் இதனை தொடர்ந்து சஹாரன்பூர் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் லவ் குமார் வீட்டின் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் லவ் குமார் கூறுகையில், “இந்த சம்பவம் தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. ராஜீவ் கும்பர், பாஜக எம்.பி.லகன்பால் உடன நாங்கள் இரண்டு சமூகத்தை சேர்ந்த மேலும் 12 பேர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். லகன்பால் மீது (வன்முறை) கும்பலை வழிநடத்தி அவர்களை தூண்டிவிட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.

தனது வீடு தாக்கப்பட்டது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, தன் வீட்டு பொருட்களும், CCTV கேமராக்களும் சேதப்படுத்தப்பட்ட போது லகன்பால் அங்கே அந்த கும்பலுடன் இருந்துள்ளார் என்றும் இது தொடர்பாக 11 பேர் மீது IPC யின் பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தனது கருத்தை தெரிவித்த லகன்பால், இச்சம்பவத்தை முன்னரே கண்டறிந்து தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தற்போது என் மீது அவர் பழி சுமத்துகிறார் என்று கூறியுள்ளார்.