உலக பார்ப்பனரும், வெள்ளைப் பரங்கியரும்

உலக பார்ப்பனரும், வெள்ளைப் பரங்கியரும்

“பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே, வெள்ளைப் பரங்கியரை துரையென்ற காலமும் போச்சே” என்று பாடினார் பாரதியார். அவர் ஏன் இவர்கள் இருவரையும் இணைத்துப் பார்த்தார், பாடினார்?

தெற்காசியாவில் ஏழாவது நூற்றாண்டு முதல் பனிரெண்டாவது நூற்றாண்டு வரை பார்ப்பனர்களின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது. மக்களின் இறை நம்பிக்கையை பயன்படுத்திக்கொண்டு, தங்களை இறைவனே தேர்வுசெய்து அனுப்பிய இறைமக்களாக முன்னிறுத்தி, தங்களின் புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள், மனுஸ்மிருதி போன்ற நூல்களின் உதவியோடு அனைத்து தரப்பினரையும் அடிமைகளாக்கினர்.

பதினைந்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பிய வெள்ளையினத்தவர் நீள் கடற்பயணங்களைத் துவங்கி, வெளிப்பகுதிகளைக் “கண்டுபிடிக்க” ஆரம்பித்தனர். இந்தியாவைத் தேடி “கண்டுபிடிப்பதற்காக” 1492-ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஸ்பெயின் நாட்டிலிருந்து புறப்பட்டார். நம் பகுதிக்கு வரத் திட்டமிட்டிருந்த கொலம்பஸ், வட அமெரிக்காவைச் சென்றடைந்தார். அங்கே வாழ்ந்திருந்த மக்களை “இந்தியர்கள்” என்றழைத்தார்.

வெள்ளையர்கள் தாங்கள் சென்றுசேரும் பகுதிகளில் தொன்றுதொட்டு வாழ்ந்துவந்த மக்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. வெள்ளையர்கள போய் இறங்கி, அவர்களைக் “கண்டுபிடித்த” பிறகுதான் அந்த பூர்வகுடி மக்களின் வரலாறேத் துவங்குவதுபோல மட்டற்ற இறுமாப்புடன் அவர்களை எதிர்கொண்டனர்.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்