உ.பி.: தகவல் சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் கைது!

உ.பி.: தகவல் சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் கைது!

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செப்டம்பர் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இக்கொடூரச் சம்பவத்தில் உயர்சாதி வகுப்பைச் சார்ந்த நான்கு நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வழக்கை முறையாக விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டிய உத்தர பிரதேச காவல்துறை குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் செயல்படுகிறதோ என்கிற சந்தேகத்தை அவர்களின் செயல்பாடுகள் ஏற்படுத்துகின்றன. மரணம் அடைந்த பெண்ணின் உடலை அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் அவசரஅவசரமாக நள்ளிரவில் காவல்துறையினரும் அரசு அதிகாரிகளும் எரித்தனர். அக்கிராமத்தை சுற்றி காவல் துறையினரை நிறுத்தி பத்திரிகையாளர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் அந்த குடும்பத்தை சந்திப்பதை தடுத்தனர். அத்துடன் வழக்கை வாபஸ் வாங்குமாறு வெளிப்படையாக மிரட்டலும் விடுத்தனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சித்தீக் காப்பன் உள்ளிட்ட நால்வரை அக்டோபர் 5 அன்று சுங்கச் சாவடியில் வைத்து உத்தரபிரதேச காவல்துறை கைது
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்