என்புரட்சி: பொறாமை சூழ் உலகு

  1. பொறாமை சூழ் உலகு

பரபரப்பாக இருந்தோம். டெட்ராய்ட் நகரில் உள்ள ஒலிம்பியா அரங்கில் தலைவர் எலிஜா முஹம்மது பேசும் பொதுக் கூட்டத்துக்கு தயாராகிக் கொண்டிருந்தோம். டெட்ராய்ட் நகர பள்ளிவாசலை ஒட்டியிருந்த முஸ்லிம் உணவகத்தில் அமர்ந்து இறுதிக் கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம்.

“ப்ரதர் எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தலைவரும் சிகாகோவில் இருந்து கிளம்பிட்டாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க. அனைத்து பள்ளிவாசல்களில் இருந்தும் இயக்க உறுப்பினர்களும் ஆயிரக் கணக்குல வந்திட்டாங்க” பொதுக் கூட்ட நிகழ்வுகளின் இறுதி வடிவத்தை நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் சகோதரர்கள் எனக்கு விளக்கிக் கொண்டிருந்தனர்.

ரொனால்ட் ஸ்டோக்ஸ் கொலைக்குப் பின், இயக்கத்தை முடக்க மூர்க்கமாக உளவுத்துறை முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் இந்தப் பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டிய பொறுப்பு எனக்கிருந்து.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்