எழுச்சியுடன் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தினம்

எழுச்சியுடன் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தினம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் பிப்ரவரி 17 பாப்புலர் ஃப்ரண்ட் தினம் அன்று தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொடியேற்று நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதன் ஒரு பகுதியாக சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள மாநில தலைமையகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் எம்.முஹம்மது சேக் அன்சாரி தலைமை தாங்கினார். தென் சென்னை மாவட்ட தலைவர் ஜெ. முஹம்மது நாஸிம், மாவட்ட செயலாளர் ஜாஹீர் உசேன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எல். அப்துல் ரஹ்மான், ஜவஹர் கிரேசி உரிமையாளர் அப்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில் பாப்புலர் ஃப்ரண்ட்-ன் மூவர்ணக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியை மாநில மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல் ரஜாக் தொகுத்து வழங்கினார். கடையநல்லூரில் தேசிய பொதுச்செயலாளர் எம். முஹம்மது அலி ஜின்னா, கோவையில் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.எஸ்.இஸ்மாயில், மதுரையில் மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது, நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் மாநில செயலாளர் முஹைதீன் அப்துல் காதர், சேலத்தில் மாநில செயலாளர் முஹம்மது ஃபயாஸ் ஆகியோர் பாப்புலர் ஃப்ரண்ட்டி-ன் மூவர்ணக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில, மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஸிறிதி துணை இராணுவ வீரர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் தின நிகழ்ச்சிகளில் ஒரு நிமிடம் மௌனம் அனுசரிக்கப்பட்டது.

my response