ஏறுமுகத்தில் பாஜக அமைச்சர்களின் சொத்து மதிப்பு: மோடியின் சொத்து மதிப்பு 42% அதிகரிப்பு.

0

மத்திய பாஜக அமைச்சர்களின் சொத்து மதிப்பு குறித்த விபரங்கள் பிரதமர் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் மோடி உட்பட பல பாஜக அமைச்சர்களின் சொத்து மதிப்பு பன் மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

அந்த தளத்தில் கிடைத்த தகவலின் படி கிராமப்புற மேம்பாட்டிற்கான மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் சொத்து மதிப்பு 67.5% உயர்வடைந்துள்ளது. 2014-15 ஆம் ஆண்டு காலத்தில் 53 லட்சங்களாக இருத்த இவரின் சொத்து மதிப்பு 2016-17 இல் 89 லட்சமாக அதிகரித்துள்ளது.

மோடியின் சொத்து மதிப்போ, 41.8% அதிகரித்துள்ளது. இந்த உயர்வானது 1.41கோடிகளில் இருந்து 2 கோடி உயர்வாகும். இந்த சொத்து மதிப்பு உயர்வில் தோமர் முதல் இடத்திலும் மோடி மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இரண்டாம் இடத்தில் சதானந்த் கெளடா உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 42.3 %  அதிகரித்துள்ளது. இது 4.65 கோடிகளில் இருந்து 6.62 கோடி உயர்வாகும்.

மத்திய அமைச்சர் சவுத்திரி பிரேந்தர் சிங்கின் 7.97 கோடி சொத்துமதிப்பு 9.85 கோடிகளாக உயர்வடைந்துள்ளது. இது 23.5% உயர்வாகும். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் சொத்து மதிப்பு 17.4% அதிகரித்துள்ளது (4.55 கோடிகளில் இருந்து 5.34 கோடிகளாக உயர்வு.) மற்றொரு அமைச்சரான வி.கே.சிங்கின் சொத்து மதிப்பு 69 லட்சத்தில் இருந்து 78 லட்சமாக 12.5% உயர்வடைந்துள்ளது. விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜுவின் சொத்து மதிப்பு 11.7% உயர்வடைந்துள்ளது. சிறுபான்மைத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியின் சொத்து மதிப்பு 7.8% உயர்வடைந்துள்ளது.

இப்படி பல அமைச்சர்களின் சொத்து மதிப்பு அதிகரிக்க சில அமைச்சர்களின் சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் சொத்து மதிப்பு 50% வீழ்ச்சியடைந்துள்ளது. அதே போன்று ராம் விலாஸ் பாஸ்வானின் சொத்து மதிப்பு 30.8 சதவிகிதமும் அருண் ஜெட்லியின் சொத்து மதிப்பு 4.3 சதவிகிதமும் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆனால் இந்த அமைச்சர்களின் சொத்து மதிப்புகளை அவர்களின் துணைவியருடன் ஒப்பிட்டு பார்த்தால் அவர்களின் சொத்து மதிப்பு கடும் உயர்வை எட்டியுள்ளது தெரியவருகிறது. மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் மனைவி பிராச்சி ஜவடேகரின் சொத்து மதிப்போ 190% உயர்வடைந்துள்ளது தெரியவருகிறது. இதன் படி ஜவடேகர் தம்பதிகளின் சொத்து மதிப்பு கூட்டாக 107% அதிகரித்துள்ளது. இது போன்றே ராம் விலாஸ் பஸ்வானின் மனைவி ரீனா பஸ்வானின் சொத்து மதிப்பு 14.9% உயர்வடைந்துள்ளது.

மொத்தம் கிடைக்கப்பெற்ற 14 அமைச்சர்களின் சொத்து மதிப்பு தகவலில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தான் அதிகப்படியான சொத்து மதிப்பு உடையவர் என்று தெரியவந்துள்ளது. அவரின் சொத்து மதிப்பு 67.7 கோடி ரூபாய்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மனைவியின் சொத்துடன் சேர்த்தால் அது 100.97 கோடிகளாக மதிப்பிடப் படுகிறது.

14 அமைச்சர்கள் மற்றும் அவர்களின் துணைவியர் சொத்து மதிப்பு பட்டியல் கீழ்வருமாறு:

Personal wealth* Rs lakhs % rise
Sr No Minister 2014-2015 2015-2016 2016-2017 2015-2016 2016-2017 In 2 years
1 PM Narendra Modi 141 173 200 22.8 15.4 41.8
2 Arun Jaitley 7078 6801 6771 -3.9 -0.4 -4.3
Wife: Sangita Jaitley 3347 3247 3326 -3.0 2.5 -0.6
Total 10425 10048 10097 -3.6 0.5 -3.1
3 Sushma Swaraj 455 522 534 14.7 2.4 17.4
Husband: Swaraj Kaushal 1596 2098 2307 31.5 10.0 44.6
Total 2050 2619 2841 27.8 8.4 38.5
4 Prakash Javadekar 111 155 56 39.3 -63.7 -49.5
Wife: Prachi Javadekar 212 374 613 76.5 64.1 189.6
Total 323 529 669 63.7 26.5 107.1
5 Sadanand Gowda 465 569 662 22.4 16.3 42.3
Wife: Datty Gowda 95 92 95 -3.0 2.9 -0.2
Total 560 661 756 18.1 14.4 35.1
6 Ram Vilas Paswan 46 52 32 12.7 -38.6 -30.8
Wife: Reena Paswan 61 70 91 13.8 31.3 49.3
Total 107 122 123 13.3 1.4 14.9
7 Ashok Gajapathi Raju 698 1019 780 45.9 -23.4 11.7
Wife: Suneela Gajapathi Raju 88 93 93 5.2 -0.3 4.9
Total 786 1111 872 41.3 -21.5 10.9
8 Mukhtar Abbas Naqvi 99 103 107 3.8 3.8 7.8
Wife: Seema Naqvi 522 505 509 -3.3 0.8 -2.5
Total 621 608 616 -2.2 1.3 -0.9
9 Jagat Prakash Nadda 180 151 154 -16.2 1.9 -14.6
Wife: Mallika Nadda 162 166 132 2.3 -20.1 -18.3
Total 342 317 286 -7.5 -9.6 -16.3
10 Narendra Singh Tomar 53 65 89 22.2 37.0 67.5
Wife: Kiran Tomar 9 9 10 3.6 2.4 6.1
Total 62 75 99 19.6 32.7 58.7
11 Chaudhary Birender Singh 797 799 985 0.2 23.3 23.5
Wife: Prem Lata Singh 696 787 1070 13.2 35.8 53.8
Total 1493 1586 2054 6.2 29.5 37.6
12 P Radhakrishnan 722 713 725 -1.2 1.7 0.4
13 V K Singh 69 71 78 3.0 9.2 12.5
Wife: Bharti Singh 30 36 46 21.0 27.5 54.3
Total 99 107 124 8.4 15.3 25.0
14 Anupriya Patel 0 0 144
Husband: Ashish Kumar Singh 0 0 39
Total 0 0 183
*net assets; as on 8 Sep 2017; Source: PMO website

 

Comments are closed.