ஐரோப்பாவில் மசூதிகள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஃபிரெஞ்ச் குடிமகன்

உக்ரைன் நாட்டில் பயங்கர ஆயுதங்களுடன் யுரோ2016 கால்பந்து போட்டியின் போது தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த வலதுசாரி ஃபிரெஞ்ச் பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

25 வயது நிரம்பிய அந்த நபர் தனது பயங்கரவாத தாக்குதலில் இஸ்லாமியர்களின் பள்ளிவாசல், யூத கோவில், உட்பட பல முக்கிய இடங்களை தாக்க திட்டமிட்டிருந்தாக உக்ரைன் பாதுகாப்பு துறை தலைவர் வசில் கிரிட்சக் தெரிவித்துள்ளது.

அந்த நபர், ஃபிரான்ஸ் நாடு அகதிகள் விஷயத்தில் கையாளும் நிலை குறித்து அதிருப்தி அடைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் ஃபிரான்ஸ் நாட்டில் இஸ்லாமின் வளர்ச்சியும் உலகமயமாக்கலும் அவர் வெறுப்பவை என்று விசாரணையில் கூறியுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஒரு தீவிர வலது சாரி சிந்தனை உடையவர் என்று தெரிய வந்துள்ளது.

இவர் தன்னுடன் 125 கிலோ TNT வெடி பொருட்களும் 100 டெட்டனேட்டர்களும் துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் கையெறிகுண்டு துப்பாக்கிகள் ஆகியவற்றை வைத்திருந்ததாக உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவரை கடந்த மே மாதம் 21 ஆம் தேதி போலந்து அருகில் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவரை குறித்த தகவல் உக்ரைன் உளவுத்துறைக்கு டிசெம்பர் மாதம் கிடைத்ததாக தெரிகிறது.

இந்த கைது குறித்த அறிவிப்பு நடக்கவிருக்கும் கால்பந்து போட்டியில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக ஃபிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலாண்டே கூறிய மறுநாள் வெளியாகியுள்ளது.