ஒற்றுமையே பலம்!

ஒற்றுமையே பலம்!

“இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; நீங்கள் பொறுமையாக இருங்கள்; -நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.” (அல் குர்ஆன் 8:46)

அநியாயக்காரர்கள் தாக்க வந்தால் பயந்து ஓடிவிடாமல் உறுதியாக நின்று அவர்களை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும். அதுதான் நம்பிக்கையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிலைப்பாடாகும். இது குறித்து இதற்கு முந்தைய வசனம் குறிப்பிடுகிறது. எதிரிகள் தாக்குதல் நடத்தும் போது பின்வாங்காமல் உறுதியாக நிற்க வேண்டுமெனில் பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைப்பதற்கான வழி முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். வேற்றுமை மூலம் உருவாகும் விளைவுகளை குறித்த முழுமையான அறிவு இருக்க வேண்டும். அதுதான் இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

சமுதாயத்திற்கும் தேசத்திற்கும் எதிரான தீய சக்திகளை வெகுஜன போராட்டங்கள் மூலம் எதிர்த்து தோற்கடிக்க ஒற்றுமை தேவை. ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவாகவும், தேசத்திற்கு நல்லதொரு எதிர்காலத்தை அளிப்பதற்காகவும் நாட்டின் சுதந்திரத்திற்காக அன்னிய ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிராகவும் நாட்டில் உள்ள முஸ்லிம்களும் இதர பிரிவினரும் ஒன்றிணைந்து போராடினர்.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்