லுங்கியை மடித்து கட்டிய தலித் வாலிபருக்கு அடி உதை

22 வயதுடைய முனியாண்டி தலித் சமூகத்தை சார்ந்தவர். திருநெல்வேலியை சேர்ந்த இவர் தசரா கொண்டாட்டங்களுக்காக குலசேகரப்பட்டினம் கடற்கரைக்கு சென்றிருந்தார். கடற்கரையில் இவர் லுங்கியை மடித்து கட்டியிருந்ததாக கூறப்படுகிறது. அங்கு இவரை வழிமறித்த சில நபர்கள் இவரை ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு இழுத்து சென்று பி.வி.சி பைப்களால் தாக்கியுள்ளனர். இதில் காயமுற்ற முனியாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முனியாண்டி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை, ஆனந்த், செல்லா, சம்முகுட்டி, இசக்கிதுரை என்ற நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் முனியாண்டிக்காக அவர்கள் காத்திருந்ததாகவும், அவருக்கு ஒரு பாடம் கற்பிக்கவே அவரை தாக்கியதாகவும் கூறியுள்ளனர். முனியாண்டியையும், மற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களையும் உயர்ஜாதி இந்துக்கள் வசிக்கும் தெருவில் செல்லும் போது லுங்கியை முழங்கால் வரை அணித்து செல்ல வேண்டும் என்று மிரட்டியாதாகவும் தெரிகிறது.

நாடு முழுவதும் தலித்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள் மக்களிடையே பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.