கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தின் நோக்கம் என்ன?

கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தின் நோக்கம் என்ன?

கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் வகையில் Ôலவ் ஜிஹாத்’துக்கு எதிரான அவசர சட்டத்துக்கு உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெரும்பாலான ஊடகச் செய்திகள் இதை Ôலவ் ஜிஹாத்’க்கு எதிரான அவசரச்சட்டம் என்று கூறுகின்றன. ஆனால், உ.பி. அரசு இது, ‘லவ் ஜிஹாத்’க்கு எதிராக மட்டுமல்ல, கட்டாய மதமாற்றத்தை தடுத்து நிறுத்துவதற்கானது என்று கூறுகிறது.

இந்த சட்டப்படி கட்டாய மதமாற்றம் செய்தால் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். பருவ வயதை அடையாதவர்களை, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரைச் சேர்ந்த பெண்களை மதம் மாற்றி திருமணம் செய்தால் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 25 ரூபாய் ஆயிரம் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். ஒரு குழுவாக மதமாற்றம் செய்தால் அதில் ஈடுபடும் அமைப்புக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

வேறொரு மதத்திற்கு மாறிய பிறகு திருமணம் செய்து கொள்ள விரும்பினால், இரண்டு மாதங்களுக்கு முன்பே மாவட்ட நீதிமன்றத்தில் முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையும் இந்த சட்டத்தில் உள்ளது. ஹரியான உள்பட பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் இது போன்றதொரு சட்டத்தை இயற்ற தயாராகி வருகின்றன. மத மாற்ற தடைச் சட்டம் என்பது இந்துத்துவ பாசிசத்தின் நிரந்தர அரசியல் பிரச்சார தந்திரங்களில் ஒன்றாகும்.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்