கல்லறையில் இருந்து பெண்ணின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு கற்பழிப்பு

கல்லறையில் இருந்து பெண்ணின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு கற்பழிப்பு – வன்முறையை தூண்டுவதற்கு என்று காவல் துறை சந்தேகம்.
மீருடின் எல்லை பகுதியில் அமைந்துள்ள தல்கேதா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மரணித்த பெண் 26 வயது நிரம்பியவர் என்றும், பிரசவத்தின் போது அவர் மரணித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு சில அடையாளம் தெரியாத நபர்களால் அந்த பெண்ணின் சடலம் கல்லறையில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு கற்பழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை பற்றி கருத்து தெரிவித்த காவல் துறை, பெண்ணின் சடலம் பாலியல் காரணங்களுக்காக தோண்டி எடுக்கப்பட்டது என்பதேர்க்கான ஆதாரங்கள் எதுவும் இப்போது வரை கிடைக்கவில்லை. இது வெறுப்பை தூண்டி மத ரீதியான மோதல்களை ஏற்படுத்தும் நோக்கத்துக்காக செய்யப்பட்டதாக நாங்கள் கருதுகிறோம் என்று கூறியுள்ளது. இறந்த பெண் சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. போஸ்ட்மார்டம் செய்யப்பட்ட பின் விசாரணை துவங்கும் என்று காவல்துறை கூறியுள்ளது.
பா.ஜ.க வின் யோகி அதியானத் போன்ற நபர்கள் இறந்த முஸ்லிம் பெண்களானாலும் கற்பழியுங்கள் என்று பொது மேடையில் கூறியது குறிப்பிடத்தக்கது.