காவல்நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்ட முஸ்லிம் சிறுவன்

ஹைதராபாத் மாநிலத்தில் ஒரு மொபைல் கடையில் வேலை செய்து வந்த முஹம்மத் கான் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) கடந்த வெள்ளிக்கிழமை சாதாரண சீருடையில் இருந்த மூன்று காவலர்களால் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவர் மொபைல் ஃபோன்களின் IMEI எண்களை மாற்றியதாக கூறி கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.

கானின் இரு கைகளிலும் தீ காயங்கள் போன்று உள்ளன. தன்னை போலீசார் தாகக் துவங்கியதும் தான் மயங்கி விட்டதாகவும் தனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்றும் ஆனால் தன்னை ஏதோ செய்கிறார்கள் என்று மட்டும் தெரிந்தது என்று கான் கூறியுள்ளார். தனக்கு நினைவு திரும்பியதும் தான் கோஷமஹால் காவலர் மருத்துவமனையில் இருந்ததாக கூறியுள்ளார்.

மருத்துவமனையில் அவருக்கு ஏற்பட்ட காயங்கள் டி கொட்டியதால் ஏற்பட்டது என்று காவல்துறையினர் கூறியதாக தெரிகிறது. ஆனால் அவரது காயங்கள் இதற்கு சற்றும் பொருத்தம் இல்லாததாக இருக்கிறது, மேலும் இதே போன்ற காயங்கள் அவரது மார்பு பகுதியிலும் ஏற்பட்டுள்ளது. இந்த காயங்களுக்காக தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த வெள்ளியன்று காவல்துறையினர் ஜகதீஸ் மார்கட் பகுதில் உள்ள சுல்தான் மொபைல் கடையின் உரிமையாளர் சுல்தானை தேடி வந்துள்ளனர். தங்களுடன் ஒரு மொபைல் திருடனையும் அழைத்து வந்தனர். அந்த திருடன் சுல்தான் எங்கே என்று கேட்டுள்ளார். சுல்தான் அங்கு இல்லாததால் அந்த கடையில் பணியாற்றி வந்த 17 வயது நிரம்பிய முஹ்ஹம்த் கானை காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். முதலில் தன்னை ஆபித் பகுதி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் என்றும் பின்னர் அங்கிருந்து பேகம் பஜார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார் கான். பின்னர் நான்கு நாட்கள் அங்கு காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆபித் பகுதி காவல் நிலையத்தில் வைத்து தான் தாக்கப்பட்டதாகவும் சித்திரவதைகளுக்கு உள்ளக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். தந்து வீட்டிற்கு ஒரு தொலை பேசி அழைப்பு கூட செய்ய விடாமல் அடித்து துன்புறுத்தினர் என்று அவர் கூறியுள்ளார்.

தன் மகனின் கைது குறித்து சனிக்கிழமை காலை தான் தனக்கு தெரிய வந்ததாகவும் தகவல் கிடைத்த உடனேயே பேகம் பஜார் காவல் நிலையஹ்டிற்கு தான் விரைந்ததாகவும் அவரது தந்தை கூறியுள்ளார். தனது மகனை காவலர்கள் கூறும் எந்த இடத்திற்கும் அழைத்து வருவதாக கூறியும், முதலில் சுல்தானை அழைத்து வா, இல்லை என்றால் உன் மகனை விட முடியாது என்று காவலர் கூறியதாக அவர் கூறியுள்ளார்.

தற்பொழுது வழக்கறிஞர் ஜெயா விந்த்யலாவின் உதவியுடன் இந்த சிறுவனின் வழக்கு தேசிய மணித உரிமை கமிஷன் முன் எடுத்துச் செல்லப்பட்டு தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கள் எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளபப்ட்டு வருவதாக முஹ்ஹம்மத் கானின் தந்தை கூறியுள்ளார்.