ஃபலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்த கிரேக்க நாடாளுமன்றம்

0

ஃபலஸ்தீனை தனி நாடாக கிரேக்க நாடாளுமன்றம் ஒரு மனதாக அங்கீகரித்துள்ளது. ஃபலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் கிரீஸ் நாட்டு பயணத்தின் போது கிரேக்க பாராளுமன்றத்தில் இந்த அங்கீகாரம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து மஹ்மூத் அப்பாஸ் கருத்து தெரிவிக்கையில் ஃபலஸ்தீன கடவுச் சீட்டுகளில் இனி ஃபலஸ்தீன அதிகாரம் (The Palestinian Authority) என்பதற்கு பதில் ஃபலஸ்தீன நாடு (State of Palestine) என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும் இந்த பெயர் மாற்றம் ஒரு ஆண்டுக்குள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

கிரீஸ் நாடு ஃபலஸ்தீனை அங்கிகரித்த இந்த செயல் இஸ்ரேலுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கிரீசில் நடைபெறும் இடது சாரி ஆட்சி சில மாதங்களுக்கு முன்னர்தான் பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டெம்பர் மாதம் 30 ஆம் தேதி நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் முதன் முறையாக ஃபலஸ்தீன கோடி பறக்கவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.