சாகித்ய அகாடமி விருது பெற்ற குளச்சல் யூசுஃப் பேட்டி

கலை – இலக்கியங்களில் சிறந்து விளங்குபவர்கள்தான் அறிவுத்துறையிலும் சிறந்து விளங்குகிறார்கள்…

சாகித்ய அகாடமி விருது பெற்ற குளச்சல் யூசுஃப் பேட்டி

2018 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி தமிழ் மொழிபெயர்ப்புக்கான விருது தங்களுக்கு கிடைத்திருப்பதில் புதிய விடியல் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. உங்களது எழுத்துப்பணி மேலும் வளர இறைவன் அருள் புரிவானாக!

மலையாளத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘திருடன் மணியன்பிள்ளை’ நூலுக்காக உங்களுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது. 2010லேயே பஷீரின் எழுத்துக்கள் உங்கள் மொழிபெயர்ப்பில் வெளிவந்து தமிழ் இலக்கிய உலகில் வெகுவாக பேசப்பட்டு விட்டது. ஆகவே, இவ்விருது தாமதமாக வழங்கப்பட்டுள்ளதாக வருத்தம் ஏதும் உள்ளதா?

கிடைக்குமென்ற நம்பிக்கையே இல்லாதபோது வருத்தம் ஏற்படுவதற்கான இடமே இல்லை. முதல் காரணம், இப்படியான ஒரு விருதை வாங்குவதற்கான பொருளாதார நிலையோ, அனுசரணை சீலமோ, அவர்களே இனம் கண்டு கொள்வதற்கான செல்வாக்கோ இல்லாதவன் நான். பரிந்துரைக்கச் சொல்வதை அவமானமாகக் கருதுபவன். பரிந்துரை செய்யட்டுமா என்று கேட்டவர்களைக்கூட பேசாமலாக்கிய திறன் பெற்றது எனது நாவின் தடித்தனம்.

ஆறேழு வருடங்களுக்கு முந்தைய ஒரு நிகழ்வு இது. சாகித்ய அகாதமி விருதின் தேர்வுக் குழுத்தலைவராக இருந்த ஒருவர் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘மொழி பெயர்ப்புக்கான இந்த ஆண்டின் சாகித்ய அகாதமி விருதை உங்களுக்கு வழங்குவதாக முடிவு செய்தோம். இப்போது, வேறு ஒருவரைத் தேர்வு செய்ததாக பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது. ஆகவே, உங்களுடைய மொழிபெயர்ப்புகளை முன்வைத்து கோவையில் ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்துள்ளோம். அதில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார். பெயர் மாற்றத்துக்கான காரணம் என்னவென்று எனக்கு மட்டுமல்ல, அவருக்கும் தெரியவில்லை.

‘மணியன் பிள்ளையுடெ ஆத்ம கதா’ என்னும் மலையாள சுயசரிதையை தமிழில் மொழிபெயர்த்ததற்கு குறிப்பிட்ட காரணங்கள் ஏதாவது உள்ளனவா?

ஆமாம். விளிம்பு நிலை மக்கள் குறித்தும் சமூகப் போராளிகள் குறித்தும் நான் மொழியாக்கம் செய்த நூல்களின் வரிசையில்தான் திருடன் மணியன் பிள்ளையும் வருகிறது. சமூக உன்னதர்களின் வாழ்வியல் பதிவுகளை விடவும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் பதிவுகள்தான் சமூக அமைப்பைச் சரிவரப் புரிந்து கொள்வதற்கான சிறந்த வழியென்று நான் கருதுகிறேன்.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்