ராமாணய காதாபத்திரங்கலான ராமன் இந்துக் கடவுள்களில் முக்கியமானவராக கருதப்படுபவர். அவரது மனைவி சீதையின் பிறப்பிடம் குறித்த வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்கள் உள்ளனவா என்ற கேள்விக்கு மத்திய கலாச்சார அமைச்சர் மகேஷ் ஷர்மா அது வெறும் நம்பிக்கை தொடர்புடையது என்றும் அதற்கு ஆதாரங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்த கேள்விக்கு எழுத்துப் பூர்வாமாக அவர் பதிலளிகையில், “சீதையின் பிறப்பிடம் நம்பிக்கைக்கு தொடர்புடையது. அதன் இருப்பிற்கு நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை. இந்திய தொல்பொருள்ஆராய்ச்சி கழகம் பீகாரில் உள்ள சீதாமாரி மாவட்டத்தில் எந்த ஒரு ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளவில்லை, அதனால் சீதையின் பிறப்பிடம் தொடர்பாக எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை.’ என்று கூறியுள்ளார்.
இவரது இந்த கருத்து பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த சந்தர்ப்பத்த்தை பயன்படுத்திக்கொண்ட எதிர்கட்சிகள், சீதையின் பிறப்பிடம் நம்பிக்கை தொடர்புடையது என்று கூறினால் சீதையின் கணவன் ராமனின் நிலையம் அதே தானா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். வால்மீகி ராமாயணத்தில் மிதிலா சீதியின் பிறப்பிடமாக கூறப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.