சைபர் பாதுகாப்பும் மக்கள் கண்காணிப்புகளும்

சைபர் பாதுகாப்பும் மக்கள் கண்காணிப்புகளும்

உன்னை நான் அறிந்தால்…

சீனா தனது மக்களை மட்டும் கண்காணிக்கவில்லை, எல்லை தாண்டி பல நாடுகளையும்   கண்காணிக்கின்றது, தகவல்களை திருடுகின்றது என பல நாடுகள் சீனாவை கடுமையாக எதிர்க்கின்றன. சீனாவின் கண்காணிப்புகள் நமது நாட்டிலும் நடைபெற்றதாக உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதன் அடிப்படையிலேயே 100க்கும் அதிகமான  சீனாவின் மொபைல் செயலிகளை தடை செய்து உத்தரவிட்டது.

செப்டம்பர் 15ந் தேதி  செய்தித் தாள்களில் முக்கிய செய்தி ஒன்று வெளியானது. சீனாவில் உள்ள  தனியார் நிறுவனம் ஒன்று தகவல்களை திரட்டித் தரும் சேவைகளை செய்து வருகின்றது, அந்நிறுவனம் இந்தியாவில் உள்ள பத்தாயிரத்திற்கும் அதிகமான முக்கிய  நபர்கள் குறித்தான பல தரவுகளை திரட்டி சீன அரசுக்கு வழங்கி உள்ளது. இதில் நம்முடைய முன்னாள் ஜனாதிபதி கிறியி. அப்துல் கலாம் துவங்கி, தற்போதுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இராணுவ தளபதி, ஆளும் கட்சியை சார்ந்த மந்திரிகள், மாநில கட்சியின் தலைவர்கள், முதல்வர்கள், எதிர்கட்சியினர், சமூக செயற்பாட்டாளர்கள், அரசு அதிகாரிகள், மாவட்ட மேயர்கள் போன்ற பல விவிஐபிகளின் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. மேலும் நமது நாட்டில்  தேடப்படும் குற்றவாளிகளையும் சீனாவின் இந்நிறுவனம் தொடர்ந்து கண்காணித்துள்ளது. நமது நாட்டின் எல்லையில் பிரச்சனைகளை செய்வது போலவே, சைபர் எல்லையை தாண்டியும் சீனா பிரச்சனை செய்து வருகின்றது.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்